IPL 2023 MI vs SRH Playing XI: தொடரை வெற்றியுடன் முடிப்பது யார்? இரு அணியின் ப்ளேயிங் லெவன் இதோ..!
IPL 2023 MI vs SRH Playing XI: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் களமிறங்கும் வீரர்கள் குறித்து இந்த தொடரில் காணலாம்.
![IPL 2023 MI vs SRH Playing XI: தொடரை வெற்றியுடன் முடிப்பது யார்? இரு அணியின் ப்ளேயிங் லெவன் இதோ..! IPL 2023 MI vs SRH Playing XI Mumbai Indians vs Sunrisers Hyderabad, 69th Match IPL 2023 MI vs SRH Playing XI: தொடரை வெற்றியுடன் முடிப்பது யார்? இரு அணியின் ப்ளேயிங் லெவன் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/21/e01bd0256eb7ae2482dd253467ab329d1684663098068728_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
IPL 2023 MI vs SRH Playing XI: ஐபிஎல் தொடரின் 69வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆஃப்பை உறுதி செய்ய முயற்சிக்கும். மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே பிளே ஆஃப் பந்தயத்தில் இருந்து விலகிய நிலையில், இன்று தனது கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது. வான்கடே மைதானத்தில் மும்பை அணி 6 லீக் போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் உள்ளது. எனவே, பார்மை தொடர முயற்சிக்கும்.
பேட்டிங்கை பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் மற்றும் நேஹால் வதேரா நல்ல பார்மில் உள்ளனர். ஆனால், பந்துவீச்சாளர்களில் நிலைமையே கவலை அளிக்கிறது. அதை சரி செய்தால் பிளே ஆஃப் கனவு பலிக்கும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடவில்லை. தற்போது ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எனவே வெற்றிபெற்று 9வது இடத்திலாவது முன்னேற முயற்சிக்கும். ஹைதராபாத் அணியின் விளையாடும் லெவன் அணியில் இருந்து உம்ரான் மாலிக்கை நீக்கியது ஏற்கனவே சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எனவே இன்றைய கடைசி லீக் போட்டியில் மாலிக்கை ஹைதராபாத் அணி முயற்சிக்கலாம்.
MI vs SRH போட்டி விவரங்கள்:
- மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி: 69
- இடம்: வான்கடே ஸ்டேடியம், மும்பை
- தேதி & நேரம்: ஞாயிறு, மே 21, பிற்பகல் 3:30 மணி
- டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா
வான்கடே ஸ்டேடியம் பிட்ச் அறிக்கை:
வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது. சேஸிங் செய்ய சிறந்த பிட்ச். 190க்கு மேல் இந்த ஸ்டேடியத்தில் எடுத்தால் நல்ல ஸ்கோராக இருக்கும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்: மயங்க் அகர்வால், விவ்ராந்த் சர்மா, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), ஹாரி புரூக், நிதிஷ் ரெட்டி, கிளென் பிலிப்ஸ், சன்விர் சிங், மயங்க் டாகர், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்
ஹைதராபாத் அணியின் இம்பாக்ட் ப்ளேயர்கள்: மயங்க் மார்கண்டே, அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, அகேல் ஹொசைன், அப்துல் சமத்
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்
மும்பை இந்தியன்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்: ராமன்தீப் சிங், விஷ்ணு வினோத். டிரிஸ்டன் ஸ்டப்ஸ், திலக் வர்மா, சந்தீப் வாரியர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)