மேலும் அறிய

MI vs PBKS, IPL 2023: மும்பை - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை..! டாப் 4ல் நுழையுமா ரோகித் படை?

ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.

மும்பை - பஞ்சாப் அணிகள் மோதல்:

வார இறுதியான இன்றைய தினத்தின் இரண்டாவது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

மும்பை அணி நிலவரம்:

மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி, மூன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. ரோகித் சர்மா, இஷான் கிஷான் தொடர்ந்து மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் அளிக்க சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட் மற்றும் வதேரா ஆகியோர் அதிரடி காட்ட அணிவகுத்து நிற்கின்றனர்.

அர்ஜுன் டெண்டுல்கர், ஜேசன் பெஹ்ரெண்ட்ரோஃப், ரிலே மெரிடித் என அனுபவம் குறைந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருப்பினும், பியூஷ் சாவ்லா சுழற்பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்கிறார். கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் வென்ற மும்பை அணி, இன்றை போட்டியிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் நுழைய முனைப்பு காட்டி வருகிறது. 

பஞ்சாப் அணி நிலவரம்:

பஞ்சாப் அணி நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. வெற்றி, தோல்வி என மாறி மாறி பெற்று வருவதே, இந்த அணியின் நிலைத்தன்மையை விளக்குகிறது. தவான் மட்டுமே தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த ஷாருக்கான், சாம் கர்ரன், லிவிங்ஸ்டன் ஆகியோர் இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை. கடைசியாக விளையாடிய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியுற்றது நினைவுகூறத்தக்கது.

மைதானம் எப்படி?

வான்கடே மைதானம் வழக்கம் போல் பேட்ஸ்மேன்களுகான சொர்க்கபூமியாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும். முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற விரும்பினால் குறைந்தபட்சமாகவே 180 ரன்களையாவது குவித்தால் தான் போராடவே முடியும்.

சிறந்த பேட்ஸ்மேன் - கேமரூன் கிரீன் இன்றைய போட்டியில் பேட்டிங்கில் அசத்த வாய்ப்பு உள்ளது

சிறந்த பந்துவீச்சாளர் - பியூஷ் சாவ்லா பஞ்சாப் அணிக்கு கடும் நெருக்கடி தரக்கூடும்

வெற்றி வாய்ப்பு யாருக்கு? : மும்பை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget