மேலும் அறிய

IPL 2023 Final: 250வது போட்டியில் களம் காணும் தோனி.. இன்றைய போட்டியில் குவிய காத்திருக்கும் ரெக்கார்ட்ஸ்..!

நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கும். 

 70 லீக் போட்டிகள் மற்றும் மூன்று பிளே ஆஃப்களுக்கு பிறகு இன்று ஐபிஎல் 16வது சீசனாவது முடிவுக்கு வருகிறது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. இரு அணிகளும் கடைசியாக சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் குவாலிபையர் 1ல் மோதியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை  15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

சென்னை அணியை பொறுத்தவரை அணி வீரர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் 15 போட்டிகளில் முறையே 625 மற்றும் 564 ரன்களை குவித்துள்ளனர். மேலும், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோர் தேவைப்படும்போது சென்னை அணிக்காக ரன்களை குவித்தனர். பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 21 விக்கெட்டுகளையும், ஜடேஜா 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கும். 

குஜராத் டைட்டன்ஸ் அணி: 

ஐபிஎல் குவாலிஃபையர் 2ல் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. குஜராத் அணிக்காக சுப்மன் கில் சிறந்த பார்மில் இருக்கிறார். இவர் இதுவரை 16 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 4 அரை சதங்கள் உள்பட 851 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்பை தனதாக்கியுள்ளார். அதேபோல், பந்துவீச்சில் முகமது ஷமி 28 விக்கெட்களையும், ரஷித் கான் 27 விக்கெட்களையும் எடுத்துள்ளனர். 

ஹெட் டூ ஹெட்: 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் தொடரில் நான்கு முறை மோதியுள்ளது. அதில், அதிகபட்சமாக  குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி ஒரு முறையும் வென்றுள்ளது. 

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இறுதி போட்டிக்கு படைக்க இருக்கும் சில ரெக்கார்ட்ஸ்களை பார்ப்போம். 

  • அஜிங்க்யா ரஹானே (94) ஐபிஎல்லில் 100 சிக்ஸர்களை அடிக்க இன்னும் 6 சிக்ஸர்கள் தேவையாக உள்ளது.  அதேபோல், டி20 கிரிக்கெட்டில் 6000 ரன்களை எட்டுவதற்கு 61 ரன்கள் ரஹானேவுக்கு தேவையாக உள்ளது.
  • ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா (148) 150 விக்கெட்களை வீழ்த்த 2 விக்கெட்கள் தேவையாக உள்ளது.
  • அம்பதி ராயுடு (496) டி20 கிரிக்கெட்டில் 500 பவுண்டரிகளை அடிக்க நான்கு பவுண்டரிகள் தேவையாக உள்ளது.
  • எம்.எஸ்.தோனிக்கு (349) ஐபிஎல் தொடரில் 350 பவுண்டரிகள் அடிக்க ஒரு பவுண்டரிகள் தேவையாக உள்ளது.
  • ரவீந்திர ஜடேஜா (98) 100 சிக்ஸர்களை அடிக்க இரண்டு சிக்ஸர்கள் தேவையாக உள்ளது.
  • குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 50 விக்கெட்களை எடுக்க முகமது ஷமிக்கு (48) 2 விக்கெட்கள் தேவையாக உள்ளது.
  • குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 50 விக்கெட்களை எடுக்க ரஷித் கானுக்கு (46) 4 விக்கெட்கள் தேவையாக உள்ளது.
  • குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 50 சிக்ஸர்களை அடிக்க சுப்மன் கில்லுக்கு (44) 6 சிக்ஸர்கள் தேவையாக உள்ளது.
  • ரவீந்திர ஜடேஜா (192) ஐபிஎல் தொடரில் 200 பவுண்டரிகளை அடிக்க 8 பவுண்டர்கள் தேவையாக உள்ளது.
  • ஐபிஎல் வரலாற்றில் இன்று களமிறங்குவதன் மூலம் 250 போட்டிகளை நிறைவு செய்த முதல் வீரர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெறுவார்.
  • ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரராக எம்எஸ் தோனிக்கு (180) 70 ரன்கள் தேவையாக உள்ளது.
  • ஐபிஎல்லில் 900 ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராக சுப்மன் கில்லுக்கு (851) 49 ரன்கள் தேவையாக உள்ளது.
  • டி20 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்த அல்சாரி ஜோசப்க்கு 1 விக்கெட் தேவையாக உள்ளது.
  • ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 150 விக்கெட்களை வீழ்த்த மோஹித் சர்மாவிற்கு 3 விக்கெட்கள் தேவையாக உள்ளது.
  • ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 150 விக்கெட்களை வீழ்த்த தீபக் சாஹருக்கு 1 விக்கெட்கள் தேவையாக உள்ளது.
  • ஐபிஎல்லில் 100 பவுண்டரிகளை எட்டுவதற்கு டெவோன் கான்வே (95) க்கு ஐந்து பவுண்டரிகள் தேவையாக உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Embed widget