IPL 2023 Awards List: மகுடம் சூடிய சென்னை..! ஐபிஎல் தொடரின் முக்கிய விருதுகளை வென்றது யார்? முழு பட்டியல்..!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முக்கிய விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முக்கிய விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
மிரட்டிய குஜராத்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நடப்பு சாம்பியனான குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 96 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.
மழையும், கோப்பையை வென்ற சென்னை அணியும்:
இலக்கை நோக்கி சென்னை அணி இறங்கியதும், முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. இதனால், 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கான்வே, ஜடேஜா போன்றோரின் அபார ஆட்டத்தால், கடைசி பந்தில் இலக்கை எட்டி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனிடையே, ஐபிஎல் தொடர் தொடங்கிய கடந்த 2008ம் ஆண்டு வெறும் 12 கோடி ரூபாயாக இருந்த பரிசுத்தொகை, தற்போது 46.5 கோடியாக உயர்ந்துள்ளது. அந்த தொகை எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை இங்கே அறியலாம்.
முதல் நான்கு அணிகளுக்கான பரிசுத்தொகை:
வெற்றியை தொடர்ந்து, சென்னை அணிக்கு கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த குஜராத் அணிக்கு 13 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 3வது இடம் பிடித்த மும்பை அணிக்கு 7 கோடி ரூபாயும், நான்காவது இடம் பிடித்த லக்னோ அணிக்கு 6.5 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.
பிற பரிசு விவரங்கள்:
01. மோஸ்ட் வேல்யுபல் பிளேயர் - சுப்மன் கில் - 12 லட்ச ரூபாய்
02. கேம் சேஞ்சர் ஆஃப் தி சீசன் - சுப்மன் கில் - 15 லட்ச ரூபாய்
03. அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரருக்கான ஊதா தொப்பி - முகமது ஷமி (28) - 15 லட்ச ரூபாய்
04. அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பி - சுப்மன் கில் (890) - 15 லட்ச ரூபாய்
05. எமர்ஜிங் பிளேயர் ஆஃப் தி சீசன் - யஷஷிவி ஜெய்ஷ்வால் - 20 லட்ச ரூபாய்
06. ஃபேர் பிளே விருது - டெல்லி கேப்பிடல்ஸ் - 10 லட்ச ரூபாய்
07. சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன் - மேக்ஸ்வெல் - 15 லட்ச ரூபாய்
08. அதிக தூரமான சிக்ஸ் அடித்த வீரர் - டூப்ளெசிஸ்
09. அதிக பவுண்டரிகளை விளாசிய வீரர் - சுப்மன் கில்
10. கேட்ச் ஆஃப் தி சீசன் - ரஷீத் கான்
11. சிறந்த மைதானங்கள் - கொல்கத்தாவின் ஈடன் கார்டன், மும்பையின் வான்கடே
இறுதிபோட்டியில் பரிசு விவரங்கள்:
- டெவோன் கான்வே ஆட்ட நாயகன் விருதை வென்றார்
- கேட்ச் ஆஃப் தி மேட்ச் விருதை எம்எஸ் தோனி வென்றார்
- அதிக நீளமான சிக்சர் அடித்த வீரர் சாய் சுதர்சன்
- அதிக பவுண்டரி அடித்த வீரர் சாய் சுதர்சன்
- போட்டியின் மிகவும் மதிப்புமிக்க சொத்து - சாய் சுதர்ஷன்
- ஆட்டநாயகன் - சாய் சுதர்சன்
- எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர் ஆஃப் தி மேட்ச் - அஜிங்க்யா ரகானே