மேலும் அறிய

LSG vs SRH, 1 Innings Highlight: ஆரம்பமே சொதப்பல்.. ஷமியிடம் சரணடைந்த டெல்லி, குஜராத்திற்கு 131 ரன்கள் இலக்கு

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் (IPL 2023, LSG vs SRH ) டெல்லி அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில்  (IPL 2023, LSG vs SRH ) டெல்லி அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் சீசன்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில், ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது முதல் பாதி போட்டிகளில் விளையாடி விட்டது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

டாஸ் வென்ற டெல்லி:

இந்த நிலையில் தொடரின் 44வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டுள்லது.  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில்  முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் டெல்லி அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்ய குஜராத் அணியும், தொடரில் நீடிக்க இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் டெல்லி அணியும் களமிறங்கியது.

ஆரம்பமே சொதப்பல்:

டெல்லி அணிக்கு இன்னிங்ஸின் தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான சால்ட், ஷமி வீசிய போட்டியின் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவரில் எதிர்பாராத விதமாக கேப்டன் வார்னர் ரநவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த ரோஸோ 8 ரன்களிலும், மணீஷ் பாண்டே ஒரு ரன்னிலும், பிரியம் கார்க் 10 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 23 ரன்களை சேர்ப்பதற்குள் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சரிவிலிருந்து டெல்லி அணியால் இறுதிவரை மீளவே முடியவில்லை.

பொறுப்பான ஆட்டம்:

இருப்பினும் 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த டெல்லி துணை கேப்டன் அக்‌ஷர் படேல் மற்றும் அமன் கான் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய இந்த கூட்டணி 55 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 27 ரன்கள் சேர்த்து இருந்தபோது அக்‌ஷர் படேல் ஆட்டமிழந்தார். அதேநேரம் பொறுப்புடன் விளையாடிய அமன் கான், 41 பந்துகளில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து 51 ரன்கள் சேர்த்து இருந்தபோது அவர் ஆட்டமிழந்தார்.

குஜராத் அணிக்கு இலக்கு:

இதனால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை சேர்த்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி, 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து,  அந்த அணி டெல்லி நிர்ணயித்த இலக்கை எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பர்க்க வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Mayiladuthurai: 300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Embed widget