மேலும் அறிய

IPL 2023, CSK vs KKR: டேபிள் டாப்பராகுமா சென்னை? கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

IPL 2023, CSK vs KKR: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  

16வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் கடந்தாண்டைப் போலவே அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,  டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தது. பி பிரிவில், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றிருந்தது. 

நடப்பு தொடரில் இதுவரை 

சென்னை அணி நடப்பு சீசனில் 12 ஆட்டங்களில் விளையாடி  7 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேசமயம் கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில்  விளையாடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது. இதேபோல் கொல்கத்தா அணி ராஜஸ்தானிடம் தோற்றது. இதனால் அந்த அணி எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வரலாறு சொல்வது என்ன? 

ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 18 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இந்த சீசனில் ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. 

மைதானத்தின் நிலவரம்

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் சென்னை மைதானம் சென்னை அணிக்கு எப்போதும் ராசியானதாகும். இந்த சீசனில் இதுவரை சென்னை அணி இம்மைதானத்தில் 6 முறை விளையாடி அதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. லீக் போட்டியில் இந்த ஆட்டம் சென்னை அணிக்கு கடைசி என்பதால் இதில் வெற்றிப் பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இதில் வெற்றி பெற்றால் சென்னை அணி  பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சாம்சங் தொழிலாளர் போராட்டம்; 'ஒடுக்கும் அரசு- மே தினத்தில் மட்டும் சிவப்பு சட்டை அணியும் ஸ்டாலின்'- ஈபிஎஸ் கண்டனம்
சாம்சங் தொழிலாளர் போராட்டம்; 'ஒடுக்கும் அரசு- மே தினத்தில் மட்டும் சிவப்பு சட்டை அணியும் ஸ்டாலின்'- ஈபிஎஸ் கண்டனம்
Breaking News LIVE OCT 9: ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
"அமைதியாக இருங்கள்; ஏனென்றால்”... 10 ஆண்டுகளுக்குமுன் தோல்வியின்போது ஓமர் அப்துல்லா பதிவு: வெற்றியின்போது வைரல்
Vettaiyan Holiday : வேட்டையன் படம் பார்க்க விடுமுறை அளித்த அலுவலகங்கள்...குழந்தைகளைப் போல் குஷியில் ஊழியர்கள்
Vettaiyan Holiday : வேட்டையன் படம் பார்க்க விடுமுறை அளித்த அலுவலகங்கள்...குழந்தைகளைப் போல் குஷியில் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thalavai Sundaram Removed From ADMK | தளவாய் நீக்கப்பட்டது ஏன்?தூக்கியடித்த EPS..தூண்டில் போடும் BJPPolice Attack Old Man | வியாபாரியை அறைந்த SI காலில் விழுந்த முதியவர் பரபரப்பு CCTV காட்சிJammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சாம்சங் தொழிலாளர் போராட்டம்; 'ஒடுக்கும் அரசு- மே தினத்தில் மட்டும் சிவப்பு சட்டை அணியும் ஸ்டாலின்'- ஈபிஎஸ் கண்டனம்
சாம்சங் தொழிலாளர் போராட்டம்; 'ஒடுக்கும் அரசு- மே தினத்தில் மட்டும் சிவப்பு சட்டை அணியும் ஸ்டாலின்'- ஈபிஎஸ் கண்டனம்
Breaking News LIVE OCT 9: ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
"அமைதியாக இருங்கள்; ஏனென்றால்”... 10 ஆண்டுகளுக்குமுன் தோல்வியின்போது ஓமர் அப்துல்லா பதிவு: வெற்றியின்போது வைரல்
Vettaiyan Holiday : வேட்டையன் படம் பார்க்க விடுமுறை அளித்த அலுவலகங்கள்...குழந்தைகளைப் போல் குஷியில் ஊழியர்கள்
Vettaiyan Holiday : வேட்டையன் படம் பார்க்க விடுமுறை அளித்த அலுவலகங்கள்...குழந்தைகளைப் போல் குஷியில் ஊழியர்கள்
Amitabh Bachchan Rajinikanth: 32 ஆண்டுகள் கேப், வேட்டையனில் அமிதாப் பச்சன் - ரஜினி காம்போ, முந்தைய கூட்டணி எப்படி?
Amitabh Bachchan Rajinikanth: 32 ஆண்டுகள் கேப், வேட்டையனில் அமிதாப் பச்சன் - ரஜினி காம்போ, முந்தைய கூட்டணி எப்படி?
Salesman, Packer Recruitment: நேர்காணல் மட்டுமே; ரூ.29 ஆயிரம் ஊதியம்- தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
Salesman, Packer Recruitment: நேர்காணல் மட்டுமே; ரூ.29 ஆயிரம் ஊதியம்- தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
Vettaiyan : வேட்டையன் டைட்டிலை மாற்ற வேண்டும்...கடுப்பான தெலுங்கு ரசிகர்கள்..என்ன காரணம் ?
Vettaiyan : வேட்டையன் டைட்டிலை மாற்ற வேண்டும்...கடுப்பான தெலுங்கு ரசிகர்கள்..என்ன காரணம் ?
Embed widget