![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CSK Captain 2023 IPL: நாயகன் மீண்டும் வர.. எட்டுத்திக்கும் பயம்தானே; சிஎஸ்கேவுக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி
CSK Captain 2023 IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
![CSK Captain 2023 IPL: நாயகன் மீண்டும் வர.. எட்டுத்திக்கும் பயம்தானே; சிஎஸ்கேவுக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி IPL 2023 CSK Captain MS Dhoni Confirmed as Chennai Super Kings Captain Confirms CSK CEO Kasi Vishwanathan CSK Captain 2023 IPL: நாயகன் மீண்டும் வர.. எட்டுத்திக்கும் பயம்தானே; சிஎஸ்கேவுக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/04/0c491e87d4d54aaf4b6256aae4d976a91662271493376224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல்லின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார். சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் மற்றும் ஐபிஎல் வீரர் சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என்று தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் குறித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்பொழுது இருந்தே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக சிஎஸ்கே அணியின் மீது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு என்பது உலக கிரிகெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று சொல்லும் அளவிற்கு முக்கியமானது. சிஎஸ்கேவை 2023ஆம் ஆண்டு ஐபிஎல்லில் யார் வழிநடத்துவார் என்பது தான்.
அடுத்த ஐபிஎல் கேப்டன் இவர்தான்! - சிஎஸ்கே சிஇஓ காசி விசுவநாதன் தந்த அப்டேட்!https://t.co/wupaoCQKa2 | #ipl #msdhoni #csk #chennaisuperkings pic.twitter.com/Cn7FQLQZsL
— ABP Nadu (@abpnadu) September 4, 2022
கடந்த 2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கமாக இருந்து வந்த ஜடேஜா, சிஎஸ்கேயை வழிநடத்தும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, தோனி வீரராக மட்டுமே களமிறங்குவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும், தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் 2வது முழுநேர கேப்டன் என்ற பெருமை ஜடேஜாவுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் 2022ஆம் ஆண்டு சீசனிலேயே கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா பின் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் வரலாற்றில் எம்.எஸ்தோனி கேப்டனாக இதுவரை செய்த சாதனைகள்:
போட்டிகள் - 204
வெற்றி - 121
இழந்தது - 82
ஓய்வு இல்லை - 1
வெற்றி சதவீதம் - 59.60.
கோப்பை வென்றது - நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)