IPL 2022: ”துபாயும் இல்லை, தென்னாப்ரிக்காவும் இல்லை.. 2022 ஐபிஎல் நடக்கப்போகும் இடம் இதுதான்” - பிசிசிஐ வட்டாரம் தகவல்
மும்பையில் உள்ள வான்கடே, டி.ஒய் பட்டீல் கைதானம், சிசிஐ எனப்படும் கிரிக்கெட் க்ளப் ஆஃப் இந்தியா, மற்றும் பூனே கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் வைத்து நடத்தப்படும் என தகவல் கிடைத்துள்ளது.
ஐபிஎல் 2022 தொடருக்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதில், ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. அதனை அடுத்து, வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை பிசிசிஐ உறுதி செய்தது.
கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாகவும் மற்றும் மூன்றாவது அலை பயம் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ஒத்தி வைத்து வருகிறது. அதனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 2022 ஐபிஎல் தொடரை வெளிநாட்டுக்கு மாற்றும் திட்டம் இல்லை எனவும், இந்தியாவிலேயே நடத்தப்படும் எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் தகவல் கிடைத்திருக்கிறது.
#IPL2022 will be held in India without a crowd. Likely venues are Wankhede Stadium, Cricket Club of India (CCI), DY Patil Stadium in Mumbai & Pune if needed: Top sources in BCCI to ANI
— ANI (@ANI) January 22, 2022
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே, டி.ஒய் பட்டீல் கைதானம், சிசிஐ எனப்படும் கிரிக்கெட் க்ளப் ஆஃப் இந்தியா, மற்றும் பூனே கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் வைத்து நடத்தப்படும் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 சீசன் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், 2022 சீசன் முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரு அணிகளும் தலா 3 வீரர்களை தேர்வு செய்திருக்கிறது. ஏற்கனவே கிடைத்த தகவலின்படி, அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக விளையாடி வந்த ஹர்திக், அகமதாபாத்தின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, மற்றொரு புதிய அணியான லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்