IPL 2022 Retention: வெறியோடு களம் காணும் வெங்கடேஷ் ஐயர்.. கொல்கத்தா கொலைவெறி பாய்ஸ் இவங்க தான்!
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் யார் யார்?
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற உள்ளன. இதன்காரணமாக அந்த தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது உள்ள 8 அணிகளும் 4 வீரர்கள் வரை தக்கவைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது. இதற்கு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளனர் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், சுனில்நரைன், ஆந்ரே ரஸல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்ரே ரஸல்- ரூ12 கோடி
வருண் சக்கரவர்த்தி- ரூ 8 கோடி
வெங்கடேஷ் அய்யர் - ரூ 8 கோடி
சுனில்நரைன் -ரூ 6 கோடி
𝙏𝙃𝙀 𝘾𝙃𝙊𝙎𝙀𝙉 𝙁𝙊𝙐𝙍 🙌
— KolkataKnightRiders (@KKRiders) November 30, 2021
Andre Russell, Varun Chakaravarthy, Venkatesh Iyer & Sunil Narine have been retained for the upcoming IPL season ✍️#KKR #AmiKKR #GalaxyOfKnights #WeTheFuture #IPLRetention pic.twitter.com/80x2cT1YtC
அடுத்த ஐ.பி.எல். தொடரில் லக்னோ, அகமதாபாத் அணிகளும் பங்கேற்க உள்ளதால் பல்வேறு வீரர்களும் புதிய அணிகளுக்கு மாற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி 8 அணிகளும் தங்களுடைய தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை அளித்த பின்பு புதிய இரண்டு அணிகள் வீரர்களை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளும் 2 இந்திய வீரர் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளுக்கும் டிசம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தும் முடிந்த பிறகு ஜனவரி மாதத்தில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: தோனியை விட அதிக... விலை போன ஜடேஜா... சிஎஸ்கே உறுதி செய்த 4 பேர்!