IPL 2022 Retention: தோனியை விட அதிக... விலை போன ஜடேஜா... சிஎஸ்கே உறுதி செய்த 4 பேர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது.

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற உள்ளன. இதன்காரணமாக அந்த தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது உள்ள 8 அணிகளும் 4 வீரர்கள் வரை தக்கவைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது. இதற்கு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளனர் என்பது தொடர்பான அதிகார்ப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை தக்க வைத்துள்ளது.
ஜடேஜா - 16 கோடி, தோனி - 12 கோடி, மொயின் அலி -8 கோடி, ருதுராஜ் - 6 கோடி
The @ChennaiIPL retention list is out! 👌
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
Take a look! 👇#VIVOIPLRetention pic.twitter.com/3uyOJeabb6
இப்படி 8 அணிகளும் தங்களுடைய தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை அளித்த பின்பு புதிய இரண்டு அணிகள் வீரர்களை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளும் 2 இந்திய வீரர் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளுக்கும் டிசம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தும் முடிந்த பிறகு ஜனவரி மாதத்தில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
The SU4ER KINGS 💛#YelloveAgain #WhistlePodu 🦁 pic.twitter.com/esmttRf48c
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) November 30, 2021
Straight from SU4ER KINGS for the Super Fans 🦁🔁💛
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) November 30, 2021
Watch full 📹 https://t.co/l4VZ3YGiPe#SuperRetention #YelloveAgain #WhistlePodu pic.twitter.com/fiZLOOMytf
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ஆர்சிபி அணியில் விராட், மேக்ஸ்வேல், சீராஜ்- சாஹலுக்கு நோ சொன்ன பெங்களூரு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

