RR vs MI: எப்போதும் எங்களுடைய முதல் ராயல் வீரர் வார்ன்... ராஜஸ்தானின் ராயல் சல்யூட் ..!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் 2008ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அப்போது ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் இருந்தார்.
இந்நிலையில் அதை நினைவூட்டும் வகையில் இன்றைய போட்டிக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்ற வீரர்கள் ஷேன் வார்ன் தொடர்பாக பேசும் வகையில் வீடியோ ஒன்று போடப்படுகிறது. அதேபோல் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் அனைவரும் தங்களுடைய ஜெர்ஸியில் எஸ் டபிள்யூ 23 என்று பொறிக்கப்பட்ட எண்களுடன் விளையாட உள்ளனர்.
Today’s more than just a game.
— Rajasthan Royals (@rajasthanroyals) April 30, 2022
Today’s #ForWarnie. 💗#RoyalsFamily | #RRvMI pic.twitter.com/xM7X4CkAv6
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ஷேன் வார்னிற்கு இது ஒரு சிறப்பான நினைவஞ்சலியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் கடந்த மார்ச் 4ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு சிறப்பான அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தத் தொடரில் இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் ஷேன் வார்ன் 4 சீசன்களில் பங்கேற்றுள்ளார். அவை அனைத்திலும் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
Always with us. 🤜🤛 #ForWarnie | #RoyalsFamily | #RRvMI | @josbuttler pic.twitter.com/7DeqL5qvjE
— Rajasthan Royals (@rajasthanroyals) April 30, 2022
மொத்தமாக 55 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்ன் 57 விக்கெட் எடுத்துள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஒரு ஐபிஎல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட் எடுத்து ஐபிஎல் தொடரில் ஷேன் வார்னின் சிறப்பான பந்துவீச்சாக அமைந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்