RR vs DC: பட்லர் சதம்.. படிக்கல் அரைசதம்.. நடப்பு தொடரில் அதிகமான ஸ்கோரை அடித்த ஆர்.ஆர் - 222 ரன்கள் குவிப்பு !
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 200 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளது.
![RR vs DC: பட்லர் சதம்.. படிக்கல் அரைசதம்.. நடப்பு தொடரில் அதிகமான ஸ்கோரை அடித்த ஆர்.ஆர் - 222 ரன்கள் குவிப்பு ! IPL 2022: Rajasthan Royals set 223 runs as target for Delhi Capitals in their League game RR vs DC: பட்லர் சதம்.. படிக்கல் அரைசதம்.. நடப்பு தொடரில் அதிகமான ஸ்கோரை அடித்த ஆர்.ஆர் - 222 ரன்கள் குவிப்பு !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/22/fd8f83c22ea79e6ead42d192813da1f8_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர் மற்றும் படிக்கல் நிதானமாக தொடங்கினர்.
அதன்பின்னர் படிக்கல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். அவரைத் தொடர்ந்து 14 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த பட்லரும் அதிரடியாக ஆட தொடங்கினார். அவர் 36 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 10 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 87 ரன்கள் எடுத்திருந்தது.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த படிக்கல் 31 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். தன்னுடைய அரைசதத்திற்கு பிறகு பட்லர் சிக்சர் மற்றும் பவுண்டரிகள் தொடர்ந்து விளாசினார். இதனால் ராஜஸ்தான் அணி 15 ஓவர்களின் முடிவில் 155 ரன்கள் எடுத்தது. படிக்கல் 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
What a knock, Jos!
— IndianPremierLeague (@IPL) April 22, 2022
Take a bow!@josbuttler departs after a scintillating knock of 116.#TATAIPL pic.twitter.com/dIwOwXrWQB
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த பட்லர் 57 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். இறுதியில் 65 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து பட்லர் ஆட்டமிழந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 2 சதம் அடித்து அசத்தினார். ஒரே தொடரில் 3ஆவது சதத்தை அடித்து அசத்தினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகமான ஸ்கோரை ராஜஸ்தான் அணி பதிவு செய்துள்ளது. நடப்புத் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217 ரன்கள் குவித்திருந்தது. தற்போது அந்த ஸ்கோரை ராஜஸ்தான் அணியே முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)