IPL 2022 : கூட்டத்தில் நின்று விசில் அடித்த ரெய்னா... ட்விட்டரில் கண்ணீர் விடும் சின்ன தல ரசிகர்கள்!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றால் முதலில் தோனிக்கு பிறகு நினைவுக்கு வருவது சின்ன தல ரெய்னாதான்.
ஐபிஎல் 15 சீசன் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று நேருக்கு நேர் மோதி வருகின்றனர். கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும், சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் களமிறங்குகின்றனர். இதையடுத்து, இரண்டு புதிய கேப்டன்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று இரு அணிகளில் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றால் முதலில் தோனிக்கு பிறகு நினைவுக்கு வருவது சின்ன தல ரெய்னாதான். முதல் ஐபிஎல் முதல் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரை வீரராக சுரேஷ் ரெய்னா களமிறங்கி வந்தார். ஐபிஎல் தொடரில் இவருடைய சிறப்பான செயல்பாட்டை பார்த்து இவருக்கு மிஸ்டர் ஐபிஎல் என்ற பட்டமும் கிடைத்தது.
There is clear Rift between franchise and Raina,
— Kiki (@FlyingSlip_) March 26, 2022
His Fans - Franchise betrayed him, Loyalty changed.
Meanwhile Suresh Raina ~ pic.twitter.com/iv2E4a9wh0
எனினும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்கவில்லை. அதன்பின்னர் குஜராத் அணி காயம் காரணமாக மாற்று வீரரை தேடி கொண்டிருந்த போது அதற்கு சுரேஷ் ரெய்னா எடுக்கப்படுவார் என்று பலரும் ட்விட்டரில் கருத்து கூறி வந்தனர். எனினும் ரெய்னாவை அந்த அணி எடுக்கவில்லை. ஆஃப்கானிஸ்தான் வீரர் ரமனுல்லா குர்பாஜை அந்த அணி எடுத்தது.
இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காதநிலையில், தற்போது ரெய்னா 15 வது ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்கியுள்ளார். இன்றைய போட்டியின் தொடக்கத்தில் சிஎஸ்கேவுக்காக விசில் அடித்து ரசிகர்களை ஊக்கப்படுத்தினார் ரெய்னா. இதையடுத்து, இதைப்பார்த்த சின்ன தல ரெய்னா ரசிகர்கள், ரெய்னா உங்களை இப்படி ஒரு கோலத்தில்தான் பார்க்கணுமா என்று சோகமாக கருத்து தெரிவிக்க, மறுபுறம் ரெய்னாவை இப்படியாவது பார்த்தாபோதும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டியை விட ரெய்னாவை அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் அதிகளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Suresh Raina 🥺💔 pic.twitter.com/nztD5RcO4E
— Kanan Shah (@KananShah_) March 26, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்