KKR vs PBKS, 1 Innings Highlights: தாக்குப்பிடிக்காத பஞ்சாப் ஆல்-அவுட்டான பரிதாபம்.. கொல்கத்தா வெற்றிப்பெற 138 ரன்கள் இலக்கு!
IPL 2022, KKR vs PBKS: கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை, உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளும், சவுதி 2 விக்கெட்டுகளும், ஷிவம் மாவே, சுனில் நரைன், ரஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரின் எட்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.
போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே கேப்டன் மயாங்க் அகர்வால் எல்.பி.டபிள்யூவாகி வெளியேறினார். உமேஷ் யாதவின் இந்த அதிரடி ஓவரால் அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் நிதானமாக விளையாடினர். பனுகா ராஜபக்ஷேவை (31) தவிர மற்ற பேட்டர்கள் சோபிக்கவில்லை.
ஷிகர் தவான் 16 ரன்களுக்கும், லிவிங்ஸ்டன் 19 ரன்களுக்கும், ராஜ் பவா 11 ரன்களுக்கும் வெளியேற பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் சரிந்தது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஷாரூக்கான் டக்கவுட்டாக, ஹர்ப்ரதீர் பர் 14 ரன்களும், ரபாடா 25 ரன்களும் சேர்த்தனர். இதனால், 20 ஓவர்களை கூட முழுதாக விளையாடாத பஞ்சாப் அணி, 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்திருக்கிறது.
Innings Break!@y_umesh leads the charge with the ball as #PBKS are bowled out for 137 in 18.2 overs 👏 👏#KKR chase to begin shortly.
— IndianPremierLeague (@IPL) April 1, 2022
Scorecard - https://t.co/lO2arKbxgf #KKRvPBKS #TATAIPL pic.twitter.com/tLLPAAKXKv
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை, உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளும், சவுதி 2 விக்கெட்டுகளும், ஷிவம் மாவே, சுனில் நரைன், ரஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
This is an Umesh Yadav appreciation tweet 😍
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022
4-1-23-4 - Figures we aren't forgetting for a long long time.#KKRHaiTaiyaar #KKRvPBKS #IPL2022 pic.twitter.com/glShXnDWOt
எளிதான இலக்கை சேஸ் செய்து களமிறங்கும் கொல்கத்தா அணி, இந்த போட்டியில் வெற்றி பெறும் என தெரிகிறது. இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வியுடன் களத்தில் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்