MI vs DC: அசத்தலாக அரைசதம் விளாசிய இஷான் கிஷன்... மும்பை ஸ்கோரை எட்டிப்பிடிக்குமா டெல்லி?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
ஐபிஎல் தொடரின் 2ஆவது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
இருவரும் பவர்ப்ளே ஓவர்களில் டெல்லி அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். இதனால் 6 ஓவர்களின் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்து வந்த அன்மோல் ப்ரீத் 8 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
Splendid Knock 👌👌
— IndianPremierLeague (@IPL) March 27, 2022
FIFTY up for @ishankishan51. Will he power @mipaltan to a perfect finish❓
Live - https://t.co/WRXqoHz83y #TATAIPL #DCvMI pic.twitter.com/MhrzY0HMTq
பின்னர் வந்த திலக் வர்மா சிறப்பாக தொடங்கினார். அவரும் பவுண்டரிகள் விளாச தொடங்கினார். எனினும் 22 ரன்கள் எடுத்திருந்த போது கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பொல்லார்டு 3 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஒருபுறம் விக்கெட் விழந்து கொண்டிருந்தாலும் மறுமுனையில் இஷான் கிஷான் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் மும்பை அணியின் ஸ்கோர் விகிதத்தை குறையாமல் பார்த்து கொண்டார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 3ஆவது அரைசதத்தை இஷான் கிஷன் அடித்துள்ளார். டெல்லி அணி சார்பில் குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்