LSG vs MI: நடப்புத் தொடரில் மும்பைக்கு எதிராக 2ஆவது சதம்.. கே.எல்.ராகுல் அபாரம்- லக்னோ 168 ரன்கள் குவிப்பு !
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 168 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 2019ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் டிகாக் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டிகாக் 10 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த மணீஷ் பாண்டே கேப்டன் ராகுலுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர் 37 பந்துகளில் 50 ரன்கள் கடந்தார். மறுமுனையில் ஆடி வந்த மணீஷ் பாண்டே 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மார்கஸ் ஸ்டையோனிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
103* off 62 deliveries from the #LSG Skipper.
— IndianPremierLeague (@IPL) April 24, 2022
Take a bow, @klrahul11 #TATAIPL #LSGvMI pic.twitter.com/RkER4HAf6l
13 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் வந்த க்ரூணல் பாண்ட்யா ஒரு ரன்னில் பொல்லார்டு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த தீபக் ஹூடாவும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ராகுல் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால் 18 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 19ஆவது ஓவரை வீசிய பும்ரா வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். சிறப்பாக ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் 61 பந்துகளில் 102 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக 2ஆவது முறையாக சதம் கடந்து அசத்தினார்.
மேலும் ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்தார்.
ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள்:
6- கெயில் (141 இன்னிங்ஸ்)
5-விராட் கோலி (207 இன்னிங்ஸ்)
4- பட்லர் (71 இன்னிங்ஸ்)
4- கே.எல்.ராகுல் (93 இன்னிங்ஸ்)
4-ஷேன் வாட்சன் (141 இன்னிங்ஸ்)
4-டேவிட் வார்னர் (155இன்னிங்ஸ்)
இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்