Hardik Pandya Fitness Test: ’10 ஓவர்கள் வீசணும்’ - ஹர்திக் பாண்டியாவுக்கு செக் வைத்த என்சிஏ
ஒரு வேளை முழு உடற்தகுதி பரிசோதனையில் அவர் தேர்ச்சி பெறவில்லை என்றால், இந்த் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பேட்டிங் மட்டும் செய்வார் என சொல்லப்படுகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. இதன்படி ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 26-ம் தேதி சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கடந்த தொடரில் இரண்டாம் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு முன்பு பிசிசிஐயின் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவர் தேர்ச்சி பெற, குறைந்தது 10 ஓவர்கள் வீச வேண்டும் என விதிமுறை வைக்கப்பட்டுள்ளது. மேலும், 16.5 புள்ளிகளுக்கும் அதிகமாக எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
View this post on Instagram
அடுத்த வாரம் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உள்ளதால், பரோடா மைதானத்தில் குஜராத் அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கி உள்ளனர். பேட்டிங், ஃபீல்டிங்கை பொறுத்தவரை ஹர்திக் ஃபிட்டாக இருப்பதாகவும், பவுலிங் வீசும்போது இன்னும் அவரிடம் இருந்து 100% அவுட்புட் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால், இந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பந்துவீசுவாரா என்பதில் சந்தேகம் உள்ளது. ஒரு வேளை முழு உடற்தகுதி பரிசோதனையில் அவர் தேர்ச்சி பெறவில்லை என்றால், இந்த் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பேட்டிங் மட்டும் செய்வார் என சொல்லப்படுகிறது.
கேப்டன், பேட்டர், பவுலர் என ஆல்-ரவுண்டராக கலக்கும் ஹர்திக், விரைவில் உடற்தகுதி தேர்ச்சி பெற்று ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்