![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
DC vs PBKS, Innings Highlights: 160 ரன்கள் இலக்கை எட்டி ப்ளே ஆப் வாய்ப்பை பிரகாசமாக்குமா பஞ்சாப்..?
IPL 2022, DC vs PBKS: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 159 ரன்களை குவித்துள்ளது.
![DC vs PBKS, Innings Highlights: 160 ரன்கள் இலக்கை எட்டி ப்ளே ஆப் வாய்ப்பை பிரகாசமாக்குமா பஞ்சாப்..? IPL 2022: DC Given target of 160 runs against PBKS in Match 64 at DY Patil Stadium DC vs PBKS, Innings Highlights: 160 ரன்கள் இலக்கை எட்டி ப்ளே ஆப் வாய்ப்பை பிரகாசமாக்குமா பஞ்சாப்..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/16/81a25c93858befc2de42f0f74e4c27a2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 64வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞசாப் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய டெல்லிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
அதிரடி வீரர் டேவிட் வார்னர் கோல்டன் டக் அவுட்டாகினார். அடுத்து ஜோடி சேர்ந்த சர்பாஸ் கானும், மிட்ஷெல் மார்ஷூம் அதிரடியாக ஆடினர். சர்பாஸ்கான் 16 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மிட்ஷெல் மார்ஷூக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த லலித்யாதவ் 21 பந்துகளில் 24 ரன்களுடன் அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப்பண்ட் 3 பந்துகளில் 1 சிக்ஸருடன் 7 ரன்களில் லிவிங்ஸ்டன் பந்தில் அவுட்டானார். அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோவ்மென் பாவெல் 2 ரன்களில் அவுட்டானார். விக்கெட்டுகள் ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் பொறுப்புடன் ஆடிய மிட்ஷெல் மார்ஷ் அரைசதம் கடந்தார். பொறுப்புடன் ஆடிய மிட்ஷெல் மார்ஷ் 63 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் அவுட்டானார்.
அவர் 48 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். மிட்ஷெல் மார்ஷ் ஆட்டமிழந்த பிறகு பெரியளவில் ரன் ஏதும் வரவில்லை. அக்ஷர் படேல் மட்டும் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 20 ஓவர்களில் டெல்லி 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது.
லியாம் லிவிங்ஸ்டன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரபாடா 1 விக்கெட் வீழ்த்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)