![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
CSK vs RCB, Match Highlights: சென்னை அணிக்கு முதல் வெற்றி... ஜடேஜா தலைமையில் வெற்றியை பற்றி... 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல்!
IPL 2022, CSK vs RCB: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐபிஎல் 2022 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
![CSK vs RCB, Match Highlights: சென்னை அணிக்கு முதல் வெற்றி... ஜடேஜா தலைமையில் வெற்றியை பற்றி... 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல்! IPL 2022: CSK won the match by 23 runs against RCB in Match 22 at DY Patil Stadium CSK vs RCB, Match Highlights: சென்னை அணிக்கு முதல் வெற்றி... ஜடேஜா தலைமையில் வெற்றியை பற்றி... 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/12/05f7185d73e3a5fea91f68ad03ad5d33_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவித்து வருகிறது. இதனால், ரசிகர்களின் விமர்சனத்திற்கு வீரர்கள் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், டாக்டர் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் ருதுராஜ், மொயின் அலி அவுட் ஆகி சென்ற பிறகு ஷிவம் டுபே, உத்தப்பா ஆகியோர் முதலில் பொறுமையாக ஆடி, 10 ஓவர்களுக்கு பிறகு ஆர்சிபி பவுலர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரும் மாறி மாறி அடித்து அணியின் ரன்களை வேகமாக ஏற்றினார்கள். முதல் 10 ஓவரில் 60 ரன்கள் அடித்த சிஎஸ்கே அடுத்த 10 ஓவரில் 156 ரன்கள் எடுத்தது.
துபே, உத்தப்பா ஒரு ஓவருக்கு ஒரு சிக்சர் என 16 ஓவரில் இருந்து அடித்தனர். இருவரும் அரைசதம் அடித்த பிறகுதான், இன்னும் அதிரடி காட்டினர். சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை செய்யாமல் சென்றுவிட்டனர். இதில், கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் சதம் தொடலாம் என்ற நிலையில் துபே இருந்தார். ஆனால், அவர் அடித்த பந்து டு பிளிசஸ் இடம் கேட்ச் ஆனது. அவர் பந்தை கீழே வைத்ததால், 95 நாட் அவுட் உடன் துபே பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. பெங்களூர் அணியின் கேப்டன் டுபிளிசி எட்டு ரன்களுடனும், கோலி 1 ரன்களிலும் நடையைக்கட்டினர். தொடர்ந்து, அனுஜ் ராவத் 12 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அதன்பிறகு, ஷாபாஸ் மற்றும் சுயாஷ் பிரபுதேசாய் இணைந்து அதிரடி காட்ட தொடங்கினார். கிடைத்த பந்துகள் எல்லாம் பௌண்டரிகளை ஓடவிட்டு அசத்த, சென்னை அணியின் வீரர்கள் விக்கெட் எடுக்க தடுமாறினர். சிறப்பாக விளையாடிவந்த சுயாஷ் பிரபுதேசாய் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து தீக்ஷனா வீசிய 13 வது ஓவரில் அவுட் ஆனார்.
நல்ல பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக் களமிறங்கிய முதல் பந்தே பௌண்டரிக்கு விரட்ட, மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஷாபாஸ் 27 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து தீக்ஷனா வீசிய 15 வது ஓவரில் க்ளீன் போல்டானார்.
ஜடேஜா வீசிய 16 வது ஓவரில் ஹசரங்கா ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு, அடுத்த பந்தே அவுட் ஆக, பின்னால் வந்த ஆகாஷ் தீப்பும் அதே ஓவரில் நடையைக்கட்டினார். ஒரு கட்டத்தில் பெங்களூர் அணிக்கு 24 பந்துகளில் 71 ரன்கள் தேவையாக இருந்தது.
முகேஷ் வீசிய 17 வது ஓவரில் தினேஷ் கார்த்திக் முதல் மூன்று பந்துகளில் அடுத்தடுத்து 2 சிக்ஸர், ஒரு பௌண்டரியை தெறிக்கவிட்டார். கடைசி 18 பந்துகளில் 48 ரன்கள் தேவை என்ற நிலையில், ப்ரோவோ பந்து வீச வந்தார்.
போட்ட முதல் இரண்டு பந்துகள் வைட் விழுக, அடுத்த பந்து அடித்து தினேஷ் கார்த்திக் ரன் எடுக்கவில்லை. அதற்கு அடுத்த பந்து தூக்கிய தினேஷ் கார்த்திக் (14 பந்து 34 ரன்கள்) ஜடேஜாவிடம் கேட்சானார். பெங்களூர் அணி இந்த நிலைமையில் 9 விக்கெட்களை இழந்து இருந்தது.
தொடர்ந்து கடைசி இரண்டு ஓவர்கள் ஜோர்டன் மற்றும் பிராவோ சிறப்பாக பந்துவீச, சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஐபிஎல் 2022 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)