IPL 2022 : பவர் ப்ளேவில் அரசன்..! விக்கெட் வீழ்த்துவதில் அசுரன்! புதிய மைல்கல்லை எட்டிய புவனேஷ்வர் குமார்!
பஞ்சாப் அணியின் கேப்டன் தவான் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் SRH வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் 28ஆவது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. மும்பையின் டிஓய் பட்டீல் மைதானத்தில் போட்டியில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 60 ரன்களும், ஷாருக்கான் 26 ரன்களும் எடுத்து இருந்தனர். ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 4 விக்கெட்களும், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்களும், நடராஜன் மற்றும் சுஜித் தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.
இந்தநிலையில், மயங்க் அகர்வால் இல்லாத நிலையில், அணியை வழிநடத்திய கேப்டன் ஷிகர் தவான், 11 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், புவனேஷ்வர் குமாரால் பெவிலியன் திரும்பினார். இந்த விக்கெட் வீழ்த்தியதன் மூலம் SRH வேகப்பந்து வீச்சாளர் ஒரு பெரிய மைல்கல்லை எட்டினார், ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதாவது, ஐபிஎல் போட்டியின் முதல் 6 ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியர்களின் பட்டியலில் புவனேஸ்வர் குமார் 54 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக சந்தீப் சர்மா- 53 விக்கெட்களும், ஜாகீர் கான்- 52 விக்கெட்களும், உமேஷ் யாதவ் - 51 விக்கெட்களுடன் உள்ளனர்.
That's the end of the powerplay and #PBKS have lost their openers with 48 on the board.
— IndianPremierLeague (@IPL) April 17, 2022
Live - https://t.co/WC7JjTqlLB #PBKSvSRH #TATAIPL pic.twitter.com/3qf9drH1DQ
அதேபோல், புவனேஸ்வர் குமார் ஐபிஎல் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வேகப்பந்து வீச்சாளர் ஆவார் என்ற சாதனையும் படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக, மேற்கிந்திய தீவுகளின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ மற்றும் இலங்கையின் லசித் மலிங்கா 170 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து தரவரிசையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்