RR vs DC: கடைசி ஓவரில் வெடித்த நோபால் சர்ச்சை.. ட்விட்டரை அதிரவிட்ட ரசிகர்கள்... !
டெல்லி அணியின் பேட்டிங்கின் போது ஆட்டத்தின் 19ஆவது ஓவரில் ஒரு நோபால் சர்ச்சை எழுந்தது.
[ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 222 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் டெல்லி அணியின் பேட்டிங்கின் போது 20ஆவது ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரோவ்மேன் பவல் களத்தில் இருந்தார். முதல் இரண்டு பந்துகளை அவரை சிறப்பாக சிக்சர் அடித்தார். அதன்பின்னர் 3ஆவது பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். அந்தப் பந்து ஃபுல் டாஸாக வந்தது. அது நோபாலாக இருக்கும் என்று டெல்லி அணியின் வீரர்கள் அனைவரும் கேட்டனர். எனினும் நடுவர்கள் அதை நோபால் ஆக அறிவிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதற்கு அடுத்த பந்தை ரோவ்மேன் பவல் மிஸ் செய்தார்.
It was a Clear NO BALL
— Ganesh manoj (@ganesh8322) April 22, 2022
What Umpires are doing there????
It’s was disappointing. #DCvsRR #RRvsDC #IPL2022 https://t.co/3TB0w9SII8 pic.twitter.com/wJCfDOldZb
இந்தச் சம்பவம் தொடர்பாக பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். கிரிக்கெட் விதிமுறைகளின் படி ஒரு பந்து ஃபுல் டாஸாக பேட்ஸ்மேனின் இடுப்பிற்கு மேல் வரும் போது நோபாலாக கருதப்படும். இந்தப் போட்டியில் அப்படி தான் அந்த மூன்றாவது பந்து இருந்தது. எனினும் அதை நடுவர்கள் நோபாலாக கொடுக்கவில்லை. இது டெல்லி வீரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் பிரவீன் அம்ரே மைதானத்திற்குள் உள்ளே வந்து நடுவர்களிடம் முறையிட்டார். எனினும் அதை நடுவர்கள் ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
"UMPIRING" - The worst part about the best cricket league #IPL on earth.
— Sirshendu Paral 🇮🇳 (@sirshe22) April 22, 2022
NB: That was No ball. #RRvsDC #IPL2022 pic.twitter.com/gT6RbeimjH
It was no ball?@vikrantgupta73 #pant#Powell#NoBall#IPL2022 #DCvsRR pic.twitter.com/JexLvJe5DU
— Rupankar Chowdhury05 (@RupankarChowdh4) April 22, 2022
Umpire has not given No Ball.
— Altaf Husain (@husainaltaf0214) April 22, 2022
Rishabh Pant be like : Aise cheating hoga to mai nhi khelega 😂😂#RRvsDC #IPL2022 pic.twitter.com/KwHRYEqPzL
No ball is always a controversy when you play against rajasthan royals 😂😂 #IPL2022 #DCvRR pic.twitter.com/UnKFDpmvRw
— ഗോപാലകൃഷ്ണൻ (@crazygopalaan) April 22, 2022
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்