SRH vs RR, 1 Innings Highlight: நான் தனி ஆள் இல்ல... செஞ்சுட்டாரு சஞ்சு... ஐதராபாத்துக்கு ராஜஸ்தான் கொடுத்த டார்கெட் 165!
IPL 2021, SRH vs RR: அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 82, ஜெய்ஸ்வால் 36, லோம்ரோர் 29* ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி, ஹைதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக ரன்கள் நிர்ணயித்துள்ளது.
துபாயில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் தொடக்க வீரராக லீவிஸ், ஜெய்ஸ்வால் களமிறங்கினார்கள். இரண்டாவது ஓவரிலேயே லீவிஸ் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். அடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இவரும், ஜெய்ஸ்வாலும் பொறுப்புடன் விளையாடினார்கள். பவர்பிளேயில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்தது. 9ஆவது ஓவரில் இரண்டாவது விக்கெட்டை ராஜஸ்தான் இழந்தது. சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் (36 ரன்கள்) கிளீன்போல்ட் ஆனார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து வந்த லிவிங்ஸ்டன் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 13.4 ஓவரில் ராஜஸ்தான் அணி 100 ரன்கள் எடுத்தது . பொறுப்புடன் விளையாடி வந்த சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். இதனைத் தொடர்ந்து, சஞ்சு சரவெடியாய் வெடித்தார். காலின் ஓவரை ரவுண்டி கட்டி அடித்தார். அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரிகளை அடித்தார். மொத்தம் 20 ரன்கள் அடித்தார். அத்துடன், ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் 3000 ரன்களை எடுத்தார். இதனைத்தொடர்ந்து, புவனேஸ்வர் குமார் ஓவரில் 10 ரன்கள், அடுத்து ஹோல்டர் ஓவரில் 10 ரன்கள் எடுக்க அந்த அணியின் ரன்கள் வேகமாக ஏறியது. பொறுப்புடனும், அதிரடியாகவும் விளையாடிய சாம்சன் 82 ரன்னில் ஆட்டமிழந்தார். கால் பந்தில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரியான் பராக்கும் ஆட்டமிழந்தார்.20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து, ஹைதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 165 ரன்கள் நிர்ணயித்துள்ளது.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
A superb knock of 82 from the #RR Captain propels them to a total of 164/5 on the board.#SRH chase coming up shortly.
Scorecard - https://t.co/3wrjO6J87h #SRHvRR #VIVOIPL pic.twitter.com/ajSu25YkEq
அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 82, ஜெய்ஸ்வால் 36, லோம்ரோர் 29* ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் கால் இரண்டு விக்கெட்டுகளும், ரஷித் கான், சந்தீப் சர்மா, ரஷித் கான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத் அணி வெற்றி இலக்கை நோக்கி விளையாட உள்ளது.
70* vs Capitals
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 27, 2021
82 vs Sunrisers
Sanju Samson is coming good just at the right time for the Royals 👊#SRHvRR | #IPL2021
70* vs Capitals
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 27, 2021
82 vs Sunrisers
Sanju Samson is coming good just at the right time for the Royals 👊#SRHvRR | #IPL2021