CSK vs KKR, 1 Innings Highlight: கடைசியில் கோட்டைவிட்ட சென்னை, 171 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்த கொல்கத்தா..
இதுவரை, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்த 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மும்பை, பெங்களூரு என இரு முக்கிய அணிகளையும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் தோற்கடித்த இரு அணிகள் இன்று மோதின. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சென்னை அணியும், 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் மோதுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171ரன்கள் எடுத்தது கொல்கத்தா அணி.
திரிபாதி, டிகே பேட்டிங்கால் 150-ஐ எட்டிய கொல்கத்தா:
ஓப்பனிங் களமிறங்கிய சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயருக்கு முதல் ஓவரிலேயே செக் வைத்தது சென்னை அணி. தீபக் சஹார் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டு, ரிவ்யூவில் விக்கெட் மிஸ் ஆனதால் கில் சேவ் செய்யப்பட்டார். ஆனால், அடுத்த பந்திலேயே ரன் -அவுட்டாகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திரிபாதி, வெங்கடேஷ் ஐயருடன் பார்ட்னர்ஷிப் அளிப்பார் என எதிர்ப்பார்த்தபோது, தாகூர் வீசிய முதல் ஓவரிலேயே வெங்கடேஷ் ஐயர் பெவிலியன் திரும்பினார். இந்த சீசனின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவனான வெங்கடேஷ் ஐயர், தாகூர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
திரிபாதி மட்டும் களத்தில் நின்று நிதானமாக ஆட, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. வெங்கடேஷை அடுத்து களமிறங்கிய மோர்கன் ஹேசல்வுட் பந்துவீச்சில் 8 ரன்களுக்கு அவுட்டானார். அவரை அடுத்து ரஸல் களமிறங்கினார். வந்த வேகத்தில் 1 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசிய ரஸலை தாகூரின் தயவால் சென்னை தூக்கியது. திரிபாதி, ராணா மட்டும் நிதானமாக விளையாடினர். ஜடேஜாவின் பந்துவீச்சில் அரை சதம் அடிக்க இருந்த திரிபாதி அவுட்டானார். இதனால், கடைசி சில ஓவர்களுக்கு களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சில பவுண்டர்களை பறக்கவிட்டு ஸ்கோரை 150-க்கு எடுத்துச் சென்றார். இதனால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது கொல்கத்தா அணி.
வரலாறு சொல்வது என்ன?
சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்த 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி இரண்டாவது பேட்டிங் செய்த 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி இரண்டாவதாக பேட்டிங் செய்த 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், இன்றைய சேஸிங்கில் சென்னை அணி இலக்கை எட்டுமா என அடுத்த இன்னிங்ஸில் பார்ப்போம்.
மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா அணியும் மோதும் இந்த போட்டியில், சேஸிங் இன்னும் பரபரப்பாக இருக்க போகின்றது.