மேலும் அறிய

RR vs MI: மும்பைக்கு டஃப் கொடுக்குமா ராஜஸ்தான்? நாக்-அவுட்டில் ஜெயிக்கப்போவது யார்?

கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில்தான் மும்பை, ராஜஸ்தான் அணிகள் இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளன. 

2021 ஐபிஎல் சீசன் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில போட்டிகளே உள்ள நிலையில், ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்டன. ஆனால், நான்காவது இடத்துக்காக கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் களத்தில் இருக்கும் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியுள்ளது. எனினும், மீதமிருக்கும் மூன்று அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதால், கடைசி லீக் போட்டி வரை பரபரப்பு இருக்கும் என தெரிகிறது. கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில்தான் மும்பை, ராஜஸ்தான் அணிகள் இன்று மோத உள்ளன. 

இந்த ஐபிஎல் சீசனின் இரண்டாம் பாதி, நடப்பு சாம்பியனான மும்பைக்கு சொதப்பலாகவே அமைந்துள்ளது. இரண்டாம் பாதி போட்டிகளில் மும்பை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே மும்பை வெற்றி பெற்றுள்ளது. இதனால், மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் பெருவாரியான வித்தியாசத்தில் ரன் ரேட்டுக்கு சாதகமான முறையில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.

ராஜஸ்தானைப் பொருத்தவரை, கடைசிப் போட்டியில் வலுவான சென்னை அணியை தோற்கடித்து அதிரடி காட்டியது. ஆனால், இந்த சீசனில் கன்சிஸ்டண்டாக வெற்றிகள் பெறாததால், ராஜஸ்தானின் ப்ளே ஆஃப் வாய்ப்பு தள்ளிப்போனது. கடைசியாக, மீதமிருக்கும் போட்டிகளிலும் அதிரடி வெற்றிகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்று மும்பையை எதிர்கொள்ள களமிறங்குகிறது ராஜஸ்தான்.

மும்பை vs ராஜஸ்தான் - நேருக்கு நேர்

இதுவரை 26 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், மும்பை அணி 13 முறையும், ராஜஸ்தான் 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இன்று போட்டி நடைபெற இருக்கும் ஷார்ஜா மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்பு மோதியதில்லை. நடப்பு ஐபிஎல் சீசனைப் பொருத்தவரை, இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்து மும்பை அணி 8 முறையும், ராஜஸ்தான் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சேஸிங் ரெக்கார்டைப் பொருத்தவரை, ராஜஸ்தான் 10 போட்டிகளில் வெற்றிகரமாக சேஸ் செய்து வென்றுள்ளது, மும்பை 5 முறை வெற்றி பெற்றுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cylinder Blast : திடீரென வெடித்த சிலிண்டர் உயிருக்கு போராடும் 7 பேர் பதறவைக்கும் CCTV காட்சிTrichy Flight Landed : 2 மணி நேரம் போராட்டம் தரையிறங்கிய விமானம் SMART-ஆக செயல்பட்ட விமானிகள்Mohammed Siraj : DSP அவதாரம் எடுத்த சிராஜ்! கெத்து காட்டும் கிரிக்கெட் வீரர்! இனி ரவுடிகள் ஜாக்கிரதைPTR on Trichy flight landing :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
Embed widget