![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
CSK vs MI, Match Highlights: ருதுராஜ் ,சாஹர் அசத்தலால் நடப்புச் சாம்பியனை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்
நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளது.
![CSK vs MI, Match Highlights: ருதுராஜ் ,சாஹர் அசத்தலால் நடப்புச் சாம்பியனை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் IPL 2021: CSK won the match by 20 runs against MI in Match 30 at Dubai International Stadium CSK vs MI, Match Highlights: ருதுராஜ் ,சாஹர் அசத்தலால் நடப்புச் சாம்பியனை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/19/f6730824840bd192fb0b5e40b83dc698_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2021 ஐபிஎல் தொடரில் இரண்டாவது பாதி இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் சென்னை-மும்பை அணி மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை அணி முதலில் தொடர்ச்சியாக விக்கெட் இழந்து தடுமாறியது. இதைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் அடித்தது.
157 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 17 ரன்கள் எடுத்திருந்த போது தீபக் சாஹர் பந்துவீச்சில் எல்டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது நடுவர் அவுட் அளிக்கவில்லை. அந்த சமயத்தில் சிஎஸ்கே கேப்டன் ரிவ்யூ கேட்டு முக்கியமான டி காக் விக்கெட் விழ முக்கிய காரணமாக அமைந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அன்மோல்பிரீத் 16 ரன்களுடன் தீபக் சாஹர் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி அவுட் ஆகினார். பின்பு சூர்யகுமார் யாதவ் 3 ரன்களுடன் ஷர்தல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி முதல் 6 ஓவர்கள் கொண்ட பவர்ப்ளேவில் 3 விக்கெட் இழந்து 41 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து இஷான் கிஷன் மற்றும் சவுரப் திவாரி சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் பிராவோவின் பந்துவீச்சில் இஷான் கிஷன் 11 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு மற்றும் திவாரி ஆகிய இருவரும் மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 13 ஓவர்களில் மும்பை அணி 87 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் 15 ரன்களில் பொல்லார்டு ஹேசல்வூட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து வந்த குரூணால் பாண்ட்யா 4 ரன்களுடம் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 17 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 108 ரன்கள் எடுத்து இருந்தது.
இதன்பின்னர் கடைசி ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 24 ரன்கள் தேவைப்பட்டது. இதில் சிறப்பாக பந்துவீசிய பிராவோ மில்னேவின் விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் ராகுல் சாஹர் விக்கெட்டையும் வீழ்த்தினார். இறுதியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நடப்புச் சாம்பியன் மும்பை அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது. மேலும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2019ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை அணி தோற்கடித்து உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை-மும்பை போட்டிகளில் 6ல் மும்பையும் ,2ல் சென்னையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நடப்பு சீசனுடன் ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகும் விராட் கோலி !
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)