T20 World Cup Squad: இந்த 5 வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் இருந்து நீக்கப்படலாம்.. யார் இந்த முக்கிய வீரர்கள்..?
வருகின்ற ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடினால், ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவரது இடம் கேள்விகுறிதான்.
ஐபிஎல் 2024க்கு பிறகு, இந்திய அணி வருகின்ற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ளது. இந்திய அணி வருகின்ற ஜூன் 5ம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. அதேசமயம், ஜூன் 9ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி களமிறங்குகிறது.
தற்போது இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பிஸியாக உள்ளனர். ஆனால், உலகக் கோப்பைக்கு இந்திய அணி தேர்ந்தெடுக்கப்படும்போது, ஐபிஎல்லில் விளையாடிய விதமும் பார்க்கப்படும். வருகின்ற மே 1ம் தேதிக்குள் இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் விளையாட பல்வேறு இருந்தாலும், பிசிசிஐயின் பார்வை 15 வீரர்களின் மீது மட்டுமே இருக்கும். ஐபிஎல்-லில் வீரர்களின் செயல்திறன்களை பார்த்தால், பல முக்கிய வீரர்கள் நீக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்தநிலையில், உலகக் கோப்பை அணியின் இடம் பெற தவிக்கப்போகும் அந்த 5 முக்கிய வீரர்கள் யார் என்று இங்கே பார்க்கலாம்..
உலக கோப்பை அணியில் கே.எல்.ராகுலுக்கு இடம் கிடைக்காதா?
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் உலக கோப்பை அணியில் இருந்து நீக்கப்படலாம். இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவரது சராசரி 31.50 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 128.57 ஆகவும் உள்ளது. இந்த 4 போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே எடுத்துள்ளார் ராகுல், அவரது அதிகபட்ச ஸ்கோர் 58 ஆகும். தற்போது அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 20வது இடத்தில் உள்ளார்.
இதேபோல், வருகின்ற ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடினால், ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவரது இடம் கேள்விகுறிதான்.
ஷ்ரேயாஸ் ஐயரும் சந்தேகம்..?
ஐபிஎல் 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி வெறும் 91 ரன்களே எடுத்துள்ளார். இவரது சராசரி 30.33 ஆகவும், 131.88 ஸ்ட்ரைக் ரேட்டாகவும் உள்ளது. இது டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாக போதுமானதாக இருக்காது. அடிக்கவில்லை. அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள். இந்த ஆண்டில் இதுவரை அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 37வது இடத்தில் உள்ளார்.
மற்ற 3 வீரர்கள் யார் யார்..?
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு வீரர்களை தொடர்ந்து, அக்சார் படேல், இஷான் கிஷன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரின் பெயர்களும் சந்தேகம்தான். அக்சார் படேல் நடந்து வரும் ஐபிஎல்லில் ஒரு பந்துவீச்சாளராக சிறப்பாக செயல்பட்டாலும், ஒரு பேட்ஸ்மேனாக எதையும் சிறப்பாக செயல்படவில்லை. மேலும், மும்பை இந்தியன்ஸின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் மற்றும் பஞ்சாப் கிங்ஸின் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்படலாம். இந்த சீசனில் இதுவரை இஷான் கிஷன் மற்றும் ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடி ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இவர்களுக்கு போட்டியாக சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக தனது முத்திரையை பதிப்பதில் கடினமாக போராடி வருகிறார். அதனால், சஞ்சு சாம்சன் மீது தேர்வுக்குழு அதிக கவனம் செலுத்தலாம்.