மேலும் அறிய

IPL 2022: “என்னுடைய ஆட்டம் இன்னும் முடியல...” - மீட்பர் இன்னிங்ஸ் ஆடிய தினேஷ் கார்த்திக் நம்பிக்கை

பெங்களூரு அணியை சரிவில் இருந்து மீட்க ஷாபாசுடன் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். 13.3 ஓவர்களில் 100 ரன்களை பெங்களூர் அணி கடந்தது

மும்பையில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து பட்லரின் அதிரடி அரைசதம், ஹெட்மயரின் அதிரடியால் 169 ரன்களை குவித்தது. இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியை தினேஷ் கார்த்திக் கரை சேர்த்தார். 

பெங்களூர் அணிக்காக அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய கேப்டன் டுப்ளிசிஸ் 20 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் ராவத் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், பெங்களூர் ரசிகர்கள் விராட்கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், அவரும் சொதப்பவே அணி சரிவில் இருந்தது. 

இதையடுத்து, அணியை சரிவில் இருந்து மீட்க ஷாபாசுடன் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். 13.3 ஓவர்களில் 100 ரன்களை பெங்களூர் அணி கடந்தது. அஸ்வின் வீசிய 14வது ஓவரில் தினேஷ் கார்த்திக் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். சைனி மற்றும் பிரசித் கிருஷ்ணா வீசிய அடுத்தடுத்த ஓவர்களிலும் தினேஷ்கார்த்திக்கும், ஷபாஸ் அகமதுவும் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினர்.

ப்ரசித் கிருஷ்ணா வீசிய 19வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தை பெங்களூர் பக்கம் தினேஷ் கார்த்திக் கொண்டு வந்தார். ஷாபாஸ் 26 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசியில் 6 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜெய்ஷ்வால் வீசினார். அவர் வீசிய முதல் பந்திலே ஹர்ஷல் படேல் சிக்ஸர் அடித்து பெங்களூர் அணியை வெற்றி பெற வைத்தார். தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 44 ரன்களுடனும், ஹர்ஷல் படேல் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தினேஷ் கார்த்திக்கின் மீட்பர் ஆட்டத்திற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். அவரை பாராட்டி சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், போட்டி முடிந்தபின் பேசிய தினேஷ் கார்த்திக், ‘கடந்த ஆண்டு இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம் என எனக்கு தோன்றியது. அதனால், இம்முறை தீவிர பயிற்சி எடுத்து கொண்டேன். என்னுடைய ஆட்டம் இன்னும் முடியவில்லை என்பதை மீண்டும் நினைவுப்படுத்தி கொண்டேன். இது போன்ற சவாலான சூழலை சமாளிக்கவே நான் பயிற்சி மேற்கொள்கிறேன். பதற்றம் இல்லாமல் இருந்து போட்டியை வெல்வதே இலக்காக இருக்க வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- வெளியான அறிவிப்பு
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- வெளியான அறிவிப்பு
சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi : எதிர்க்கட்சி தலைவர் மாற்றம்? ராகுலை எதிர்க்கும் I.N.D.I.A? பற்றவைக்கும் பாஜகThiruma On DMK : ”பஞ்சமி நிலம் மீட்பு என்னாட்சு?” திமுகவுக்கு விசிக CHECK புது ரூட்டில் திருமா!MP Ravikumar slams PM Modi |உ.பி-க்கு 34000 கோடி,நமக்கு வெறும் 7000 கோடியா?மோடியை விளாசும் I.N.D.I.ABengaluru Pigeon Thief | புறாவை வைத்து 30 லட்சத்தை சுருட்டிய திருடன்! பெங்களூரை அலறவிட்ட கேடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- வெளியான அறிவிப்பு
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- வெளியான அறிவிப்பு
சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களமிறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
பதறும் சென்னை விமான நிலையம்.. தொடரும் கடத்தல் சம்பவம்.. என்னம்மா இப்படி பண்றீங்க ?
“சைக்கிளுக்கு 50, பிளைட்டுக்கு 5000” வடிவேலு பாணியில் உசிலம்பட்டியில் வசூல்வேட்டை..!
“சைக்கிளுக்கு 50, பிளைட்டுக்கு 5000” வடிவேலு பாணியில் உசிலம்பட்டியில் வசூல்வேட்டை..!
Chennai Train Accident:  கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
Chennai Train Accident: கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
Embed widget