IPL 2024: ரோகித் சர்மா எனது தோளில் கைபோட்டு இந்த தொடர் முழுவதும் என்னுடனே இருப்பார் - ஹர்திக் பாண்டியா!
ரோகித் சர்மா எனது தோளில் கைபோட்டு இந்த தொடர் முழுவதும் என்னுடனே இருப்பார் என எனக்கு தெரியும் என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.
ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது. இந்த ஆண்டு 17 வது சீசன் நடைபெற உள்ளது. 17 வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோத உள்ளன. இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதேபோல், மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய முதல் போட்டியை மார்ச் 24 ஆம் தேதி விளையாடுகிறது. அதாவது குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் அந்த அணி மோத உள்ளது. கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த இருக்கிறார்.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா இந்த முறை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது மும்பை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
ரோகித்திற்கு கீழ் விளையாடி உள்ளேன்:
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர் ஹர்திக் பாண்டியா அது குறித்து பேசியுள்ளார். “கேப்டன் மாற்றம் என்பது வித்தியாசமாக இருக்காது. ரோகித் சர்மா எப்போதும் எனக்கு உதவுவார். அவர், தலைமையில் மும்பை அணி சாதித்துள்ளது. இதை நான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நான் எனது முழு கிரிக்கெட் வாழ்க்கையையும் அவருக்கு கீழ் விளையாடி உள்ளேன்” என்றார்.
அப்போது அவரிடம் ரோகித் சர்மா கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக அவரது கேப்டன்சியில் ஆடுவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அது எந்த வகையிலும் விசித்திரமாகவோ, வித்தியாசமாகவோ இருக்காது. அது நல்ல அனுபவமாக இருக்கும். அவர் எனது தோளில் கைபோட்டு இந்த தொடர் முழுவதும் என்னுடனே இருப்பார் என எனக்கு தெரியும்." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”இப்போது நான் உடற்தகுதியுடன் தயாராக இருக்கிறேன், அனைத்து போட்டிகளிலும் விளையாட திட்டமிட்டுள்ளேன். ஐபிஎல்லில் அதிக போட்டிகளை நான் தவறவிடவில்லை. காயம் காரணமாக மூன்று மாதங்கள் வெளியேறினேன்” என்று கூறினார்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!