மேலும் அறிய

GT vs RR, IPL 2023 LIVE: இறுதியில் ருத்ரதாண்டவமாடிய ராஜஸ்தான்; குஜராத் அணியை முதல் முறை வீழ்த்தி அசத்தல்..!

IPL 2023, Match 23, GT vs RR: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

LIVE

Key Events
GT vs RR, IPL 2023 LIVE:  இறுதியில் ருத்ரதாண்டவமாடிய ராஜஸ்தான்; குஜராத் அணியை முதல் முறை வீழ்த்தி அசத்தல்..!

Background

குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்துள்ள மோதல்கள் தொடர்பான புள்ளி விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ராஜஸ்தான் - குஜராத் மோதல்:

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்ட்யா தலைமயிலான குஜராத் அணியை, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம். முன்னதாக, இரு அணிகளுக்கு இடையே இதுவரை நடந்த போட்டிகளின், முடிவுகள் தொடர்பாக இந்த தொகுப்பில் அறியலாம்.

ராஜஸ்தானிற்கு ஹாட்ரிக் தோல்வி:

ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு அறிமுகமானதோடு முதல் சீசனிலேயே கோப்பையையும்  வென்ற குஜராத் அணி, இதுவரை ராஜஸ்தான் அணியுடன் மூன்று முறை விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியின் மூலம், தொடர் தோல்விகளுக்கு ராஜஸ்தான் அணி குஜராத் அணியை பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகபட்ச, குறைந்தபட்ச ஸ்கோர் விவரங்கள்:

குஜராத் அணிக்கு எதிரான ராஜஸ்தான் அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 188

ராஜஸ்தான் அணிக்கு எதிரான குஜராத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 192 

குஜராத் அணிக்கு எதிரான ராஜஸ்தான் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 130

ராஜஸ்தான் அணிக்கு எதிரான குஜராத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 133

தனிநபர் சாதனைகள்:

குஜராத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர் - ஜோஸ் பட்லர் (182), ராஜஸ்தான்

குஜராத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர் - ஹர்திக் பாண்ட்யா (5), குஜராத்

குஜராத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - ஜோஸ் பட்லர் (89), ராஜஸ்தான்

குஜராத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சு - ஹர்திக் பாண்ட்யா (3/17), குஜராத்

நடப்பு தொடரில் இதுவரை:

நடப்பு தொடரில் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் தலா 3 வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளன. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி முதலிடத்திலும், குஜராத் அணி நான்காவது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

ராஜஸ்தான் உத்தேச அணி:

ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மேயர், ஜூரெல், அஷ்வின், ஜேசன் ஹோல்டர், போல்ட், சந்தீப் சர்மா, சாஹல்

குஜராத் உத்தேச அணி:

சாஹா, சுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, மோஹித் சர்மா, ஜோஸ்வா லிட்டில்

23:12 PM (IST)  •  16 Apr 2023

GT vs RR Live Score: ராஜஸ்தான் வெற்றி..!

ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

22:56 PM (IST)  •  16 Apr 2023

GT vs RR Live Score: 17 ஓவர்கள் முடிவில்..!

17 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் சேர்த்துள்ளது. 

22:51 PM (IST)  •  16 Apr 2023

GT vs RR Live Score: அக்ரசிவ் மோட்..!

ராஜஸ்தான் அணி கடந்த சில ஓவர்களாக அதிவேக ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்துள்ளது. 

22:43 PM (IST)  •  16 Apr 2023

GT vs RR Live Score: விக்கெட்..!

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 32 பந்தில் 60 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

22:40 PM (IST)  •  16 Apr 2023

GT vs RR Live Score: சஞ்சு சாம்சன் - அரைசதம்..!

களமிறங்கியது முதல் பொறுப்புடன் விளையாடி வரும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 29 பந்தில் 50 ரன்கள் சேர்த்துள்ளார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget