GT vs MI IPL 2023 Qualifier2 Playing XI: வென்றால் இறுதிச் சுற்று; தோற்றால் இதுவே இறுதி.. இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் இதோ..!
GT vs MI IPL 2023 Qualifier 2: குவாலிஃபைரட் 2வது சுற்றில் களமிறங்கும் மும்பை மற்றும் குஜராத் அணி வீரர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போகும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று போட்டி இன்று அதாவது மே மாதம் 26ஆம் தேதி நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி வரும் 28ஆம் தேதி இறுதிப் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ளும். இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
பரபரப்பான ஐபிஎல் தொடர் நாளை மறுநாளுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் திருவிழா கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த ஒன்றரை மாதங்களாக கொண்டாட்டமாக இருந்தது. 10 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் தொடரில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது.
இதில் மே 23 ஆம் தேதி நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் அணியை சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து மே 24 ஆம் தேதி நடந்த எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதிப் பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி, முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோற்ற குஜராத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர்:
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்தாண்டு அறிமுகமாகி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேசமயம் 5 முறை சாம்பியனான மும்பை கடந்த இரு சீசன்களாகவே தட்டுதடுமாறி வருகிறது. இப்படியான நிலையில் இரு அணிகளும் 2 சீசன்களையும் சேர்த்து 3 ஆட்டங்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 2 ஆட்டங்களில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனிலும் 2 லீக் ஆட்டங்களில் குஜராத், மும்பை அணிகள் மோதி தலா ஒரு வெற்றியைப் பெற்றது.
ப்ளேயிங் லெவன்
மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளேயிங் லெவன்:
இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா(கேப்டன்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்
மும்பை இந்தியன்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள்:
ராமன்தீப் சிங், விஷ்ணு வினோத், நேஹல் வதேரா, சந்தீப் வாரியர், ராகவ் கோயல்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் ப்ளேயிங் லெவன்:
விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி
குஜராத் டைட்டன்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள்:
ஜோசுவா லிட்டில், ஸ்ரீகர் பாரத், ஒடியன் ஸ்மித், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், சிவம் மாவி