CSK vs SRH, IPL 2022 Live: வெற்றியுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கும் தோனிப்படை
புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 46வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேருக்கு நேர் மோத இருக்கின்றன.
LIVE
Background
ஐ.பி.எல். தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றும் ப்ளே ஆப் வாய்ப்பு சுற்றை நிர்ணயிக்கும் என்பதால் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறவே முயற்சிக்கும். புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 46வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேருக்கு நேர் மோத இருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு ஆரம்பம் முதல் தடுமாற்றம்தான். இதுவரை நடந்த 8 போட்டிகளில் 6 தோல்வியை சந்தித்தது. இதனால் கிட்டத்தட்ட சிஎஸ்கே அணியின் ப்ளே ஆப் கனவு மங்கியது என்றே சொல்லலாம். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப்களுக்குச் செல்ல இனி வரும் போட்டியில் ஒன்றில் கூட தோற்காமல் இருக்க வேண்டும். அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்து வரும் 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெறுவதன் மூலம் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
நேற்று திடீரென சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகுவதாக, அவருக்கு பதிலாக கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார். வழக்கம்போல், தோனி ஏதாவது ஒரு மேஜிக் செய்து மீண்டும் சென்னை அணியை ப்ளே ஆப்க்கு தகுதி பெற செய்வார் என்று நம்புகின்றனர்.
இலக்கை நெருங்கிய ஹைதராபாத்... வெற்றியை தவறவிட்டது!
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி. இதனால், 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இந்த போட்டியை வென்றது
இலக்கை நெருங்கிய ஹைதராபாத்... வெற்றியை தவறவிட்டது!
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி. இதனால், 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இந்த போட்டியை வென்றது
வில்லியம்சன் அவுட்டானதை அடுத்து சொதப்பிய ஹைதராபாத்
47 ரன்கள் எடுத்திருந்தபோது கேன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரை அடுத்து 39 ரன்களுக்கு அபிஷேக்கும் அவுட்டாக, ஒன் டவுன் களமிறங்கிய ராகுல் த்ரிபாதி டக்-அவுட்டாகி வெளியேறினார்.
நம்பிக்கை தந்த ஓப்பனர்கள்
கடினமான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, சிறப்பான ஓப்பனிங் கொடுத்தது கேன் வில்லியம்சன் - அபிஷேக் ஷர்மா ஜோடி.