CSK vs PBKS Live Score: 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி...! ஹாட்ரிக் தோல்வியடைந்த சென்னை..!
Chennai Super Kings vs Punjab Kings : மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
LIVE

Background
54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி...! ஹாட்ரிக் தோல்வியடைந்த சென்னை..!
பஞ்சாப் அணி நிர்ணயித்த 181 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது ஹாட்ரிக் தோல்வி ஆகும்.
ஷிவம் துபே அவுட்...! அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்..!
சென்னை அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஷிவம் துபே 30 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் லிவிங்ஸ்டன் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், சென்னை 14.5 ஓவர்களில் 98 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
48 பந்தில் 112 ரன்கள்..! அதிரடிக்கு மாறிய ஷிவம் துபே- தோனி..!
இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனியும், ஷிவம் துபேவும் அதிரடியாக ஆடத்தொடங்கியுள்ளனர். சென்னை அணியின் வெற்றிக்கு 48 பந்தில் 112 ரன்கள் தேவைப்படுகிறது.
10 ஓவர்களில் 53 ரன்கள்..! 60 பந்துகளில் 128 ரன்கள் தேவை...!
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் சென்னை அணி 10 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களை எட்டியுள்ளது. களத்தில் தோனி 3 ரன்களுடனும், ஷிவம் துபே 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
37 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்...! சென்னையை காப்பாற்றுவாரா தல தோனி..?
181 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் பொறுப்பற்ற முறையில் பேட் செய்து ஆட்டமிழக்க, அம்பத்தி ராயுடு காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரும் 13 ரன்களில் ஓடீன் ஸ்மித் பந்தில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

