IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அடுத்த போட்டி குஜராத் கூட.. இதோ! ஆரம்பமான டிக்கெட் விற்பனை..!
சென்னை சூப்பர் கிங்ஸ் வருகின்ற 26ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.
ஐபிஎல் 2024ல் நேற்றைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தியது. இந்தநிலையில், இந்த போட்டிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் வருகின்ற 26ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.
இந்த போட்டிக்கான விற்பனை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. பார்வையாளர்கள் வரிசையில் நின்று நீண்டநேரம் காத்திருக்கும் சூழ்நிலையை தவிர்ப்பதற்காக இந்த முறை அனைத்து டிக்கெட்களை ஆன்லைனின் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டை எங்கு, எப்படி பெறுவது..?
- பேடிஎம் ( Paytm) மற்றும் www.insider.in. ஆகிய இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுகொள்ளலாம்.
வழிகாட்டு முறைகள்..
- பேடிஎம் அல்லது www.insider.in. பக்கத்திற்கு முதலில் செல்லவும்.
- அதில், TATA IPL 2024 டிக்கெட் என்ற பக்கத்தை க்ளிக் செய்யவும்.
- பக்கத்தின் உள்ளே சென்றதும் எந்த போட்டி என்பதை தேர்வு செய்து, நமக்கு தேவையான இருக்கையை தேர்வு செய்யவும்.
- ஒரு நபர் அதிகபட்சமாக 2 டிக்கெட்களை பெறலாம்.
- உங்களின் பணத்தின் தேவையேற்ப டிக்கெட்டை தேர்வு செய்து, பணம் செலுத்தினால் 7 நிமிடங்களுக்கு பிறகு உங்களது டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
டிக்கெட் விலை:
ஒரு டிக்கெட்டின் ஆரம்ப விலை ரூ. 1,500 முதல் ரூ. 7, 500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து அணிகள் மற்றும் அவர்களின் டிக்கெட் பார்ட்னர்கள் பற்றிய விவரம் இதோ..
சென்னை சூப்பர் கிங்ஸ் (Paytm Insider), மும்பை இந்தியன்ஸ் (BookMyShow), குஜராத் டைட்டன்ஸ் (Paytm Insider), லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் (BookMyShow), ராஜஸ்தான் ராயல்ஸ் (BookMyShow), பஞ்சாப் கிங்ஸ் (Paytm Insider), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Paytm இன்சைடர்), கொல்கத்தா நைட் ரி ஹைதராபாத் (BookMyShow), Royal Challengers Bangalore (TicketGenie) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (Paytm Insider).
ஸ்டாண்ட்ஸ் வாரியாக டிக்கெட் விலை - சென்னை சேப்பாக்கம்
ஸ்டாண்ட்ஸ் |
விலை |
Lower – C, D, E |
ரூ. 1700 |
Upper – I, J, K, C, D, E |
ரூ. 4000 |
Lower – I, J, K |
ரூ. 4500 |
KMK Terrace |
ரூ. 7500 |
- ஐபிஎல் 2024: போட்டி நடைபெறும் இடம் மற்றும் அவற்றின் விலை பட்டியல் இதோ
- வான்கடே ஸ்டேடியம், மும்பை (மகாராஷ்டிரா): டிக்கெட் விலை ரூ. 800 முதல் 35,000 வரை
- எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை (தமிழ்நாடு): டிக்கெட் விலைகள் ரூ. 1,500 முதல் ரூ. 7, 500 வரை
- பிசிஏ ஸ்டேடியம், மொஹாலி (பஞ்சாப்): டிக்கெட் விலை ரூ. 800 முதல் ரூ. 25,000 வரை
- ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா (மேற்கு வங்கம்): டிக்கெட் விலை ரூ. 400 முதல் ரூ. 14,000 வரை
- உப்பல் ஸ்டேடியம், ஹைதராபாத் (தெலுங்கானா): டிக்கெட் விலைகள் ரூ. 400 முதல் ரூ. 18,000 வரை
- எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு (கர்நாடகா): டிக்கெட் விலை ரூ. 1,500 முதல் ரூ. 18,000 வரை
- அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி: டிக்கெட் விலை ரூ. 500 முதல் ரூ. 15,000 வரை
- சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): டிக்கெட் விலைகள் ரூ. 500 முதல் ரூ. 15,000 வரை