மேலும் அறிய

CSK vs dc, IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் டெல்லியை வெச்சுசெய்யும் சென்னை..! உதவுமா இந்த புள்ளி விவரங்கள்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான புள்ளி விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான புள்ளி விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

சென்னை - ஐதராபாத் மோதல்:

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 55வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி மோத உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இதனை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஜியோ சினிமா தொலைக்காட்சியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை உறுதி செய்யும். அதேநேரம், டெல்லி அணி ஆரம்பித்தில் சொதப்பினாலும், தற்போது நல்ல ஃபார்மில் உள்ளது. குறிப்பாக கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் நான்கில் அந்த அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை மற்றும் டெல்லி  அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஐபிஎல் தொடரில் யார் அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை இந்த  தொகுப்பில் அறியலாம்.

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை சென்னை மற்றும் டெல்லி அணிகள் 27 முறை மோதியுள்ளன. அவற்றில் 17 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய 5 போட்டிகளில், டெல்லி அணி 3 முறையும்,  சென்னை அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரம், நடப்பு தொடரில் ஏற்கனவே மோதியபோது சென்னை அணி வாகை சூடியது. சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை இந்த இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளன. அதில் 6 முறை சென்னை அணிதான் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரங்கள்:

டெல்லி அணிக்கு எதிராக சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 222

சென்னை அணிக்கு எதிராக டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 198

டெல்லி  அணிக்கு எதிராக சென்னை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 110

சென்னை அணிக்கு எதிராக டெல்லி அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 83

தனிநபர் சாதனைகள்:

டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த சென்னை அணி வீரர்: தோனி, 604 ரன்கள்

சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த டெல்லி அணி வீரர்: தவான், 433 ரன்கள்

டெல்லி அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த சென்னை அணி வீரர்: பிராவோ, 19 விக்கெட்கள்

சென்னை அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த டெல்லி அணி வீரர்: நோர்ட்ஜே, 9 விக்கெட்கள்

ஒரு போட்டியில் தனிநபரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் - முரளி விஜய், 113

சிறந்த பந்துவீச்சு - இம்ரான் தாஹிர், 4/12

நடப்பு தொடரில் இதுவரை:

நடப்பு தொடரில் இதுவரை சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேநேரம், டெல்லி அணியோ 10 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசிஒ இடத்தில் உள்ளது. இதனால் இன்றை போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை உறுதி செய்ய சென்னை அணியை அதிக முனைப்பு காட்டி வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget