CSK vs DC Innings Highlights: டெல்லி கேபிட்டல்ஸ் அசத்தல்..வார்னர் - ரிஷப் பண்ட் அரைசதம்! சென்னை அணிக்கு 192 ரன்கள் இலக்கு!
அதிரடியாக விளையாடிய டெல்லி அணி 191 ரன்கள் விளாசியுள்ளது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்க உள்ளது.
ஐ.பி.எல் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 13 வது லீக் போட்டி இன்று (மார்ச் 31) விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. அந்த வகையில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
62 Runs in the Powerplay 🤜🏻🤛🏻 Fizz Pumped 💙 pic.twitter.com/CTxhL40UWc
— Delhi Capitals (@DelhiCapitals) March 31, 2024
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கினர். இருவரும் அந்த அணிக்கு அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அந்த வகையில் 35 பந்துகள் களத்தில் நின்ற டேவிட் வார்னர் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 52 ரன்களை குவித்தார்.
அரைசதம் விளாசிய ரிஷப் பண்ட்:
Aaj full Pushpa Mode🤩pic.twitter.com/Uz8ZE7jbuS
— Delhi Capitals (@DelhiCapitals) March 31, 2024
அதேபோல், பிரித்வி ஷா 27 பந்துகள் களத்தில் நின்று 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 43 ரன்களை விளாசினார். பின்னர் அந்த்க அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் மிட்செல் மார்ஸ் ஜோடி சேர்ந்தனர். இதில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். அதன்படி மொத்தம் 32 பந்துகள் களத்தில் நின்ற அவர் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 51 ரன்கள் விளாசினார்.
இதனிடையே மிட்செல் மார்ஸ் 18 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரம் ஏதும் இன்றி டக் அவுட் முறையில் நடையைக்கட்டினார். இச்சூழலில் அதிரடியாக அரைசதம் விளாசிய ரிஷப் பண்ட் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த அக்ஷர் படேல் 7 ரன்களும், அபிஷேக் போரல் 9 ரன்களும் எடுத்தனர். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை பொறுத்த வரை மகிஷா பத்திரானா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்நிலையில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.
மேலும் படிக்க: IPL 2024 CSK Vs DC: டாஸ் வென்ற டெல்லி..பேட்டிங் தேர்வு! சென்னைக்கு மெகா இலக்கை நிர்ணயிக்குமா?
மேலும் படிக்க: MS Dhoni Retire: இது எம்.எஸ் தோனியின் கடைசி ஐ.பி.எல். சீசனா? ரவி சாஸ்திரி ஓபன் டாக்!