மேலும் அறிய

Dhoni retirement: ஓய்வு பற்றி தோனி சொன்னது என்ன தெரியுமா..? சி.எஸ்.கே. பயிற்சியாளர் ப்ளெமிங் பதில்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் கேப்டன் தோனியின் ஓய்வு குறித்து பதிலளித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளில் முதன்மையானதாக சென்னை அணி திகழ்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனி. ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்காக 3 வடிவிலான உலகக்கோப்பையையும் பெற்றுத்தந்த தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார்.

தோனி எப்போது ஓய்வு?

தற்போது 41 வயதான தோனிக்கு இந்த ஐ.பி.எல். தொடரே கடைசி தொடராக இருக்கும் என்றும், தோனி இந்த தொடருடன் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் தகவல்கள் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பிருந்தே வெளியாகி வருகிறது. கடந்த சில போட்டிகளில் தோனி அளித்து வரும் பேட்டிகளும் தோனியின் ஓய்வை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் தொடக்க வீரருமான ஸ்டீபன் ப்ளமிங் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது, தோனி தன்னுடைய ஓய்வு குறித்து இதுவரை வெளிப்படையாக ஏதும் கூறவில்லை என்றார். சேப்பாக்கத்தில் நேற்று சென்னை – பஞ்சாப் அணிகள் போட்டிக்கு பிறகு நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் ப்ளெமிங் இதை கூறினார்.

குவியும் ரசிகர்கள்:

வழக்கமாக சென்னை அணி எங்கே விளையாடினாலும் தோனியை காண்பதற்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் மைதானத்தில் குவிவது உண்டு. ஆனால், இந்த முறை வழக்கத்தை விட அதிகளவில் எதிரணியின் ரசிகர்களும் சென்னை அணி விளையாடினால் தோனிக்கு பிரியாவிடை அளிப்பதுபோல மஞ்சள் நிற ஜெர்சியில் மைதானத்திற்கு வருகை தந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

தோனியும் ஒரு சில போட்டிகளுக்கு பின்பு அளித்த பேட்டியில், தனக்கு வயதாகிவிட்டதாகவும், தன்னுடைய கிரிக்கெட் வாழ்வின் இறுதிகட்டத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு ஈடன்கார்டன் மைதானத்தில் பலரும் மஞ்சள் நிற ஜெர்சியில் வந்திருந்தது தனக்கு ஃபேர்வெல் அளிப்பது போல உள்ளதாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

41 வயதான தோனி இதுவரை 243 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 52 ரன்களை விளாசியுள்ளார். அதில் 24 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் தோனி 84 ரன்களை விளாசியுள்ளார். ஐ.பி.எல். மட்டுமின்றி இந்திய அணிக்காகவும், சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த பினிஷராக தோனி திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: RCB vs LSG: புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 ஆகுமா லக்னோ..? மிரட்டல் வெற்றி பெறுமா ஆர்.சி.பி..! ஐ.பி.எல். வரலாறு சொல்வது என்ன?

மேலும் படிக்க: RCB vs LSG: லக்னோவை பழிதீர்க்குமா பெங்களூர்..? வெற்றியை தொடருமா லக்னோ..? இன்று நேருக்கு நேர் மோதல்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Embed widget