CSK Profit 2024: 600 கோடிப்பே! CSK வருவாயை கேட்டு வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட்டின் வருவாயானது கடந்த ஆண்டு நிதியாண்டில் இருந்ததை விட 131% வருவாய் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட அணியாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தான். இதிலும் அதிக செல்வாக்குடன் இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். எம்.எஸ்.தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேபோல், 12 முறை ப்ளே ஆப் சுற்றுக்கு சென்று அதில் 10 முறை இறுதிப் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது.
இப்படி அதிக ரசிகர்கள் கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருப்பதற்கு முக்கிய காரணம் எம்.எஸ்.தோனி தான். தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் ஆரம்பித்து விட்டால் அவரது பெயர் தலைப்புச் செய்திகளில் இடம் பெறாத நாளே இருக்காது என்றே கூற வேண்டும்.
அதே போல் சமூக வலைதளங்களிலும் தோனி தான் டாப்பில் இருப்பார். இதனால் தான் தோனியை மட்டுமே வைத்த ஐபிஎல் தொடரில் நிகர லாபத்தை ஈட்டி வருகிறது பிசிசிஐ. இச்சூழலில் தான் இவருக்காக அன் கேப்ட் விதிமுறையை கூட இந்த ஐபிஎல்லில் கொண்டு வர பிசிசிஐ பக்காவாக ப்ளான் போட்டு வருகிறது.
சிஎஸ்கே வருவாய் அதிகரிப்பு:
இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிசிசிஐயின் மைய உரிமைகள் மற்றும் டிக்கெட் விற்பனை அதிகரித்ததன் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட்டின் வருவாயானது கடந்த ஆண்டு நிதியாண்டில் இருந்ததை விட 131% வருவாய் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் வெளியுட்டுள்ள அறிக்கையின் படி, "சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெடின் (CSKCL) 2023-2024 வருவாயானது மார்ச் 2024-ல் முடிவடைந்த நிதியாண்டின் படி லாபம் மட்டும் 340% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
முந்தைய நிதியாண்டில் (2022-2023) ரூ. 52 கோடியாக இருந்த லாபமானது நடப்பாண்டில் (2023-2024) ரூ.229.20 கோடியாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த நிதியாண்டில் ரூ.292.34 கோடியாக இருந்த வருவாயானது, 2023-2024 நிதியாண்டில் ரூ.676.40 கோடியாக உயர்ந்திருப்பதாகவும், இது முந்தைய ஆண்டை விட 131% அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன
மேலும் படிக்க: Paris Paralympics 2024: பாரீஸ் பாராலிம்பிக்.. பதக்க வாய்ப்பு உள்ளதா? இந்தியா விளையாடும் போட்டிகள் என்ன தெரியுமா?
மேலும் படிக்க: Cristiano Ronaldo:900 கோல்.. "தி கோட்"என நிரூபித்த ரொனால்டோ! கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை