IPL 2022 Retention: ஒரே ஆண்டில் 30 மடங்கு விலை உயர்ந்த ஐபிஎல் வீரர்கள் இவர்கள் தான்! லட்சங்கள் கோடிகள் ஆனது!
ஐபிஎல் 2022க்கு முன்னதாக ஐந்து வீரர்கள் ஐபிஎல் 2021 சம்பளத்தை விட பத்து மடங்கு அதிக சம்பளம் பெற்றுள்ளனர். அத்தகைய ஐந்து வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :
இந்தியாவில் ஆண்டுதோறும் டி20 போட்டிகளுக்கான ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐ.பி.எல். தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் தெரிவித்திருந்தது.
அதன்படி, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நேற்று அறிவித்தது. இதில், தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒரே அணிக்காக விளையாடிய பல முக்கிய வீரர்கள் அதிரடியாக கழட்டிவிட பட்டனர். அதேபோல், இந்திய அணிக்காக விளையாடாத (அ) குறைந்த போட்டிகளில் விளையாடிய ஒரு சில வீரர்கள், பல கோடிக்கு தக்கவைக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் வாயைப்பிளக்க வைத்தனர்.
ஐபிஎல் 2022க்கு முன்னதாக ஐந்து வீரர்கள் ஐபிஎல் 2021 சம்பளத்தை விட பத்து மடங்கு அதிக சம்பளம் பெற்றுள்ளனர். அத்தகைய ஐந்து வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :
1. வெங்கடேஷ் அய்யர் - 30 மடங்கு அதிகம்
Here's @kkriders' #VIVOIPL retention list 👍#AndreRussell#varunchakravarthy #venkateshiyer #sunilnarine #VIVOIPLRetention #IPLAuction #IPL2022 #kkr pic.twitter.com/KbEXZ8tYwF
— MacDawn Amaze (@MacDawn_Amaze) November 30, 2021
ஐபிஎல் 2021 ம் ஆண்டு தொடர் வெங்கடேஷ் அய்யருக்கு ஒரு கனவு ஆண்டாகும். செப்டம்பர் 2021 க்கு முன்பு வரை அவர் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடவில்லை, ஆனால் கடைசியாக விளையாடிய மூன்று மாதங்களில் அவரது திறமை வெளிப்படுத்தப்பட்டு, அதே கொல்கத்தா அணியிலிருந்து கூடுதலாக 40 மடங்கு சம்பளம் பெற்று அசத்தியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் 20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர் தற்போது 8 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2. ருதுராஜ் கெய்க்வாட் - 30 மடங்கு அதிகம்
😁🤗🏆💛 pic.twitter.com/N30oLKahrf
— Ruturaj Gaikwad (@Ruutu1331) October 23, 2021
கடந்த ஐபிஎல் 2021 தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்க்கு ரூ 20 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது. அதே சீசனில் அந்த அணிக்காக சிறப்பாக விளையாடி ஆரஞ்சு தொப்பியை வென்றார், மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரிலும் இந்தியாவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவரது சிறப்பான ஆட்டத்தால், ஐபிஎல் தக்கவைப்பு 2022 லில் சென்னை அணி ரூ.6 கோடி கொடுத்து கெய்க்வாட்டை தக்கவைத்துள்ளது.
3. ஹர்ஷதீப் சிங் - 20 மடங்கு அதிகம்
2️⃣3️⃣ Matches
— Punjab Kings (@PunjabKingsIPL) November 30, 2021
3️⃣0️⃣ Wickets
1️⃣ 5-Wkt Haul
Welcome back the son of our soil, #SaddaPunjab da munda, @arshdeepsinghh, we are happy and excited as he will be donning the #PBKS jersey for #IPL2022! 😎#PunjabKings #IPLRetention pic.twitter.com/ArjQ3MjmfJ
ஐபிஎல் 2021 தொடரில் ரூ 20 லட்சம் பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை ரூ.4 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் தக்க வைத்துக் கொண்டது. பஞ்சாப் அணி தற்போது இரண்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொண்டுள்ள நிலையில், அதில் ஒருவராக ஹர்ஷதீப் சிங்கிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
4. மயங்க் அகர்வால் - 12 மடங்கு அதிகம்
🥁🥁🥁
— Punjab Kings (@PunjabKingsIPL) November 30, 2021
The Sher who joined us in 2018, will continue to be an integral part of #SaddaSquad!
Show some ❤️s for The Magnificent @mayankcricket 😍#SaddaPunjab #PunjabKings #IPLRetention pic.twitter.com/3DSJddOq8m
2018 ம் ஆண்டுக்கு முந்தைய ஐபிஎல் மெகா ஏலத்தில் மயங்க் அகர்வாலை ரூ. 1 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. பஞ்சாப் அணிக்காக பல போட்டிகளில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திய அவர், வருகின்ற ஐபிஎல் 2022 தொடரில் ரூ. 12 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார்.
5. அப்துல் சமாத் - 20 மடங்கு அதிகம்
Presenting the 2️⃣ #Risers along with Captain Kane who will continue to don the #SRH colours in #IPL2022 🧡
— SunRisers Hyderabad (@SunRisers) November 30, 2021
We enter the auction with a purse of INR 68 crores. #OrangeArmy pic.twitter.com/2WwRZMUelO
கடந்த ஐபிஎல் 2021 தொடரில் ரூ.20 லட்சம் சம்பளமாக பெற்ற அப்துல் சமாத், ஐபிஎல் ஏலத்தில் 2022க்கு முன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடமிருந்து ரூ.4 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிறந்த ஆல்- ரவுண்டராக விளங்கும் அப்துல் சமாத், ஹைதராபாத் அணிக்காக நிச்சயம் முக்கிய நட்சத்திரமாக ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்