INDvsNZ 2nd Test, Highlights: தொடங்கியதும் அடங்கியது நியூசி., 2வது டெஸ்டில் இமாலய வெற்றி பெற்ற இந்தியா!
5 விக்கெட்டுகள் எடுத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கியது இந்திய அணி.
![INDvsNZ 2nd Test, Highlights: தொடங்கியதும் அடங்கியது நியூசி., 2வது டெஸ்டில் இமாலய வெற்றி பெற்ற இந்தியா! INDvsNZ 2nd Test, Highlights: India wins the test match at mumbai against newzealand INDvsNZ 2nd Test, Highlights: தொடங்கியதும் அடங்கியது நியூசி., 2வது டெஸ்டில் இமாலய வெற்றி பெற்ற இந்தியா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/06/383baea95110c9758752f661460158f2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மும்பையில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. நியூசிலாந்திற்கு 540 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தது. இந்நிலையில், இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கியது இந்திய அணி.
ஜெயந்த் ஜெயம்!
இன்று போட்டி தொடங்கிய 45 நிமிடங்களுக்குள் ஜெயந்த யாதவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து 4 விக்கெடுகள் விழ, கடைசியாக அஷ்வின் பந்துவீச்சில் 10வது விக்கெட் விழுந்து போட்டியையும், தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது இந்திய அணி. இதனால், டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்குள் போட்டியை முடித்துள்ளது இந்திய அணி. இந்திய பெளலர்களைப் பொறுத்தவரை இரண்டாவது இன்னிங்ஸில், அஷ்வின், ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுக்க, அக்சர் படேல் 1 விக்கெட்டை எடுத்தார். டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்று விளையாடிய முதல் டி20, டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
#TeamIndia win the 2nd Test by 372 runs to clinch the series 1-0.
— BCCI (@BCCI) December 6, 2021
Scorecard - https://t.co/KYV5Z1jAEM #INDvNZ @Paytm pic.twitter.com/uCdBEH4M6h
கடைசியாக இந்திய அணி 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதற்கு பின்னர் 9 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் இழந்ததே இல்லை. இதனால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இந்தியாவின் 14ஆவது டெஸ்ட் தொடர் வெற்றி இது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகள்:
372 ரன்கள் vs நியூசிலாந்து (மும்பை)2021
337 ரன்கள் vs தென்னாப்பிரிக்கா (டெல்லி)2015
321 ரன்கள் vs நியூசிலாந்து (இந்தோர்)2016
320 ரன்கள் vs ஆஸ்திரேலியா (மொகாலி)2008
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)