Ind vs Eng 2nd Test | தோனிக்கு நடந்தது கோலிக்கும் நடந்த சுவாரஸ்யம்... 5-ஆம் நாள் ஆட்டத்தின் 5 முக்கிய பாயிண்ட்ஸ்!
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்று அசத்தியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது. கடைசி நாளான நேற்று. போட்டி முடிவில் இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் 2014-ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. அத்துடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்று அசத்தியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
நேற்றை தினம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு நாளாகவே அமைந்துவிட்டது. கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆல்-ரவுண்டிங் பெர்ஃபாமென்ஸைக் கொடுத்து வெற்றியை ஈட்டியுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித், புஜாரா - ரஹானே பேட்டிங், பண்ட் - ஜடேஜா பேட்டிங், டெயில் எண்டர்களின் ரன் குவிப்பு, வேகப்பந்துவீச்சாளர்களின் அதிரடி என ஒரு அணி வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளது இந்திய அணி.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் பதிவு செய்யப்பட்ட ரெக்கார்டுகளின் லிஸ்ட் இதோ!
Lord's 2014 & 2021 wins:
— Sarang Bhalerao (@bhaleraosarang) August 17, 2021
-2nd match of the series
-India lost the toss & were sent in
-Eng got 24-run lead (2014), 27-run lead (2021)
-On Day 5,Ishant got Moeen on last ball before lunch (2014) & Bairstow on last ball before tea (2021)
-Anderson last man dismissed #ENGvIND
1. 2014-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. அதனை தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றது
2. அதே போல, 2021-ம் ஆண்டு நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடியவே, அடுத்து லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
3. லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை மூன்று முறை மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
- 1986-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
- 2014-ம் ஆண்டு தோனி தலமையிலான இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
- 2021-ம் ஆண்டு கோலி தலைமையிலான இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
4. நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் இடைவெளிக்கு பிறகு, இந்திய அணி 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது. இந்த டெஸ்ட் போட்டியில் மட்டும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணி 19 விக்கெட்டுகளை எடுத்துள்ளது.
5. இந்திய அணி விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸின்போது, 9-வது விக்கெட்டிற்கு பும்ரா - ஷமி ஆகியோர் 89 ரன்கள் சேர்த்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்திய அணியின் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் முக்கிய பார்டனர்ஷிப் இது.