Ind vs Eng: மொயின் அலிக்கு புரமோஷன்: 4வது டெஸ்டில் டுவிஸ்ட் வைக்கும் இங்கிலாந்து!
34 வயதாகும் மொயின் அலி 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2879 ரன்கள் மற்றும் 193 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கான துணை கேப்டனாக ஆல் ரவுண்டர் மொயின் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகின்ற வியாழன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் மொயின் அலி கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ஏற்கெனவே துணை கேப்டனாக இருந்த ஜோஸ் பட்லர் இரண்டாவது குழந்தையின் வரவுக்காக காத்திருக்கும் நிலையில் அவர் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். இதையடுத்து மொயின் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
34 வயதாகும் மொயின் அலி 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2879 ரன்கள் மற்றும் 193 விக்கெட்கள் எடுத்துள்ளார். இவர் தவிர காயம் காரணமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த மார்க் வுட்ஸ் மற்றும் க்ரிஸ் வோக்ஸ் இருவரும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Moeen Ali has been named as our vice-captain for the fourth LV= Insurance Test against India. Congrats, Mo! 👏 pic.twitter.com/4eYRn9WXWv
— England Cricket (@englandcricket) September 1, 2021
இதற்கிடையே, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்டேண்ட்-பை வீரராக பெயரிடப்பட்டிருந்த பிரசித், இப்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2-ம் தேதி மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
இந்திய அணி விவரம்: கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ரஹானே, மயாங்க் அகர்வால், புஜாரா, ராகுல், விஹாரி, பண்ட், அஷ்வின், அக்சர் பட்டேல், பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷமி, சிராஜ், தாகூர், சாஹா, அபிமென்யூ ஈஷ்வரன், ப்ரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா
UPDATE - Prasidh Krishna added to India’s squad
— BCCI (@BCCI) September 1, 2021
More details here - https://t.co/Bun5KzLw9G #ENGvIND pic.twitter.com/IO4JWtmwnF
ஸ்டேண்ட் பை வீரர்: அர்சான் நக்வஸ்வாலா
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவாகவே, லார்ட்சில் இந்தியாவும், லீட்சில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளதால் இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதையடுத்து, தொடரின் முக்கியமான 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் வரும் இரண்டாம் தேதி தொடங்க உள்ளது.
ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்தியா இதுவரை ஓவல் மைதானத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2011, 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளில் ஆடிய போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, 2011 மற்றும் 2014ம் ஆண்டு போட்டிகளில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது.
இதனால், ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளாக தொடரும் இந்தியாவின் சோகத்திற்கு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.