India Australia Series: ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்; இந்தியாவின் முக்கிய ஆல்ரவுண்டர் விலகல்?; யார்னு தெரியுமா.?
ஆசிய கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, இந்தியாவின் முக்கியமான ஆல் ரவுண்டர் ஒருவர், ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் யார்.? பார்க்கலாம்.

நடந்து முடிந்த ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இதைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி, அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில், காயம் காரணமாக இந்திய அணியின் ஒரு முக்கியமான ஆல் ரவுண்டர் இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடர்
ஆசியக் கோப்பை போட்டிகள் நிறைவடைந்த நிலையில், அடுத்த மாத தொடக்கத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இங்கு, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவர்கள் விளையாட உள்ளனர்.
அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி 6-ம் தேதி முடியும் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 10-ம் தேதி தொடங்கி அக்டோபர் 14-ம் தேதி முடியும் 2-வது டெஸ்ட் போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம்
இதைத் தொடர்ந்து, இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அங்கு, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.
அக்டோபர் 19-ம் தேதி முதல் ஒருநாள் போட்டியும், அக்டோபர் 23-ம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், அக்டோபர் 25-ம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, அக்டோபர் 29-ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து, அக்டோபர் 31-ம் தேதி இரண்டாவது டி20 போட்டியும், நவம்பர் 2-ம் தேதி மூன்றாவது டி20 போட்டியும், நவம்பர் 6-ம் தேதி நான்காவது டி20 போட்டியும், நவம்பர் 8-ம் தேதி ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது.
அஸ்திரேலிய தொடரிலிருந்து விலகும் ஹர்திக் பாண்டியா.?
இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் இருந்து, காயம் காரணமாக இந்தியாவின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாக விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, ஆசியக் கோப்பை தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டு, கடைசி இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
இந்த நிலையில் தான், ஆஸ்திரேலிய தொடரிலிருந்தும் அவர் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.





















