மேலும் அறிய

First Gold medal for India: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கம்..! 1928ல் நடந்த மேஜிக் என்ன?

ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கம் வென்றது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஹாக்கியில் தவிர்க்க முடியாத அணியாக இந்தியா உருவெடுத்ததற்கான விதையை விதைத்த, 1928ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நிகழ்வு குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

”1928ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக பம்பாய் துறைமுகத்தில் இருந்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நோக்கி இந்திய ஹாக்கி அணி புறப்பட்டபோது, அப்போதைய இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஒரு தனிப் பத்திரிகையாளர் என, மொத்தம் மூன்று பேர் மட்டுமே அவர்களைப் பார்க்க வந்தனர். ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக ஒட்டுமொத்த உலக நாடுகளையே வியந்து பார்க்கச் செய்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனைப் படைத்து, பாம்பே திரும்பிய இந்திய அணியை வரவேற்க பல முக்கிய பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர்.”

இந்திய ஹாக்கி சம்மேளனம்:

ஆங்கிலேயர்களின் ஆட்சிப் பிடியின் கீழ் கட்டுண்டு இருந்தாலும், 1925ம் ஆண்டு இந்திய ஹாக்கி சம்மேளனம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 1927ம் ஆண்டு சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் ஒரு உறுப்பினராக அங்கீகாரம் பெற்றது. பின்பு முறையாக நிர்வாக அமைப்பு இல்லாவிட்டாலும், 1928ம் ஆண்டு நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய அணி தகுதி பெற்றது. அதனை முன்னிட்டு பம்பாய்க்கு எதிராக விளையாடிய பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஒலிம்பிக் அணி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. இருந்தாலும், தொடரில் என்ன நிகழ்ந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இந்திய அணி ஆம்ஸ்டர்டாம் புறப்பட்டது. அதேநேரம், இந்திய அணி மீது ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பு எதையும் கொண்டிருக்கவில்லை. 

இந்திய ஹாக்கி அணி:

ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்கில் பங்கேற்க ஜெய்பால் சிங் தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டது. அதில், ஆங்கிலோ இந்தியரக்ள் 9 பேர் மற்றும் தயான் சந்த் உள்ளிட்ட 7 இந்தியர்கள் இடம்பெற்றனர். இதில் 13 பேர் பம்பாயில் இருந்து புறப்படுவார்கள். ஜெய்பால் சிங், இஃப்திகார் அலி கான் படோடி மற்றும் எஸ்.எம்.யூசப் ஆகியோர் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக நெதர்லாந்து செல்வர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், படோடி அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்திய அணி: ஜெய்பால் சிங் முண்டா (கேப்டன்), புரூம் எரிக் பின்னிகர் (துணை கேப்டன்), ரிச்சர்ட் ஜே ஆலன், தயான் சந்த், மைக்கேல் ஏ. கேட்லி, லெஸ்லி சார்லஸ் ஹம்மண்ட், பெரோஸ் கான், ஜார்ஜ் எரிக் மார்தின்ஸ், ரெக்ஸ் ஏ. நோரிஸ், மைக்கேல் இ.ரோக், ஃபிரடெரிக் எஸ். சீமான், ஷௌகத் அலி, கேஹர் சிங், சையத் முகமது யூசுப், இப்திகார் அலி கான், வில்லியம் ஜேம்ஸ் குட்சிர்-கல்லன்.

தொடரின் விவரம்:

இந்த தொடரில் இந்தியா உள்ளிட்ட 9 அணிகள் இடம்பெற்றன. இந்தியா, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றன. நெதர்லாந்து, ஜெர்மன், பிரான்சு மற்றும் ஸ்பெயின் பி பிரிவிலும் இடம்பெற்றன. இரு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்த இரு அணிகள் தங்கத்திற்காக மோதும். இரண்டாவது இடத்தை பிடிக்கும் இரண்டு அணிகள் வெண்கலத்திற்காக மோதும். 

தங்கம் வென்ற மந்திரம் “தயான் சந்த்”:

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் முதல் வெளிநாட்டு தொடர் மற்றும் பயிற்சி ஆட்டங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், தயான் சந்த் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனை மேலும் அதிகப்படுத்தும் விதமாக, ஆஸ்திரியா அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தியாவின் முதல் லீக் போட்டியில், தயான் சந்த் 4 கோல்களை அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 6-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில், தயான் சந்தை மட்டுமே குறிவைத்து களமிறங்கிய பெல்ஜியம் அணியை, மற்ற இந்திய வீரர்கள் வெளுத்து வாங்கினர். இதனால், 9-0 என்ற கணக்கில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் பெரோஸ் கான் 5 கோல்களை அடித்தார்.  

இதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் தயான் சந்த் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதனால், 5-0 என்ற கணக்கில் டென்மார்க்கையும், 6-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும் இந்திய அணி வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. 


First Gold medal for India: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கம்..! 1928ல்  நடந்த மேஜிக் என்ன?

தயான் சந்த்

வெளியேறிய கேப்டன்:

டென்மார்க் அணிக்கு எதிரான லீக் போட்டி முடிவடைந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களால் கேப்டன் ஜெய்பால் சிங் தொடரில் இருந்து வெளியேறினார். ப்ரூமெ எரிக் பின்னிங்கர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இதனால், இந்திய அணியிடம் இருந்த வேகம் சற்றும் குறையவில்லை. எரிக்கின் தலைமையிலேயே சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டி - திடீர் பின்னடைவு:

லீக் சுற்றின் முடிவில் தோல்வியே இன்றி ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா, இறுதிப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் பி பிரிவில் முதலிடம் பிடித்த நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. ஆனால் எதிர்பாராத விதமாக சவுகத் அலி மற்றும் தயான் சந்த் ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டென்மார்க்கிற்கு எதிரான போட்டியில் காயமடைந்த பெரோஸ் கான் தொடரில் இருந்து வெளியேற்னார்.

மீண்டும் தயான் சந்த்:

1928ம் ஆண்டு மே 26ம் தேதி மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் திரண்டு இருந்த நெதர்லாந்தின் 50 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில், இந்திய அணி களமிறங்கியது. மோசமான உடல்நிலைக்கு மத்தியிலும் தயான் சந்த் இந்திய அணிக்காக களமிறங்கினார். அதோடு நிற்காமல் 3 கோல்களையும் அடித்து, நெதர்லாந்து அணியை 3-0 என வீழ்த்தி, இந்திய அணி தங்கம் வெல்ல வழிவகுத்தார். இதன் மூலம், ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் முறையே ஹாக்கியில் தங்கம் வென்று இந்திய அணி அசத்தியது.  

சாதனைகள்:

இந்தியாவின் 29 கோல்களில் 14 கோல்களை அடித்த தியான் சந்த், அந்த தொடரில் அதிக கோல் அடித்தவராக திகழ்ந்தார். இந்திய கோல்கீப்பர் ரிச்சர்ட் ஆலன் தொடர் முழுவதும் ஒரு கோலை கூட எதிரணிக்கு விட்டுக்கொடுக்கவில்லை.  இது 1956ம் ஆண்டு நடைபெற்ற மெல்போர்ன் ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணியால் மட்டுமே சமன் செய்யப்பட்டது . இந்த 1928ம் ஆண்டு வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து 6 முறை இந்திய அணி ஒலிம்பிக் ஹாக்கி தொடரில் தங்கப் பதக்கம் வென்றது. இதன் மூலம்,  எட்டு தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம் என 12 பதக்கங்களை ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வென்றுள்ளது. இதனால், ஒலிம்பிக் வரலாற்றில் மிகச் சிறந்த ஹாக்கி அணி என்ற பெருமையை இந்திய அணி இன்றளவும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget