Ind vs Eng, 2021: டிரஸ்ஸிங் ரூமில், கோபத்தில் விராட் கோலி செய்த வேலை - வைரலாகும் வீடியோ..!
கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் ஈடன் கார்டனில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டின்போது, தனது விக்கெட்டை இழந்த கோலி, டிரஸ்ஸிங் ரூம் கதவை அடித்தார்.
ஓவல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 44 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய இந்திய கேப்டன் விராட் கோலி, கோபத்துடன் டிரஸ்ஸிங் ரூம் கதவை அடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் ரொம்ப நிதானமக சிறப்பாக ஆடி வந்த இந்திய கேப்டன் விராட் கோலி, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி, 44 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி வீசிய பந்து, கோலியின் பேட்டில் பட்டு, ஸ்லிப்பில் இருந்த ஓவர்டன் கையில் சிக்கியது.
YESSSS Mo! 🙌
— England Cricket (@englandcricket) September 5, 2021
Scorecard/Clips: https://t.co/Kh5KyTSOMS
🏴 #ENGvIND 🇮🇳 pic.twitter.com/Weln0WGC9b
இதனைத் தொடர்ந்து, தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பிய கோலி, டிரஸ்ஸிங் ரூம்மிற்கு செல்லும்போது, கோபத்தில் கதவை அடித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Virat Kohli, come back soon King.#ENGvIND pic.twitter.com/ffgRH64FvH
— Neelabh (@CricNeelabh) September 5, 2021
முன்னதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் ஈடன் கார்டனில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டின்போது, தனது விக்கெட்டை இழந்த கோலி, டிரஸ்ஸிங் ரூம் கதவை அடித்தார். தற்போது அதேபோல், மற்றொரு சம்பவம் நடந்தேறியுள்ளது. கோலி, தற்போதைய தொடரில் ஏழு இன்னிங்ஸ்களில் 218 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 31.14.
உணவு இடைவேளை 230 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வந்த இந்திய அணி, தற்போது 6 விக்கெட்டுகள் இழப்பு 372 ரன்கள் எடுத்து 273 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரிஷப் பந்த் 37, சர்தூல் தாக்கூர் 33 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 191 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, 99 ரன்கள் முன்னிலை பெற்று 290 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானது. ரவி சாஸ்திரிக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபி நிபுணர் நிதின் படேல் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் அருண் ஆகியோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Rohit Sharma Test Century: அடி அடி பிலீவர் அடி.. ரோஹித் ஷர்மாவின் செஞ்சுரியைக் கொண்டாடிய கோலி..!