IND vs ENG 1st Test Live updates: இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸில் 183 ரன்னுக்கு சுருண்டது
ஐந்து போட்டிகளை கொண்ட இந்த தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Background
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
Nottingham மைதானத்தில் நடைபெற உள்ள இப்போட்டி இந்திய நேரடிப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர்தான் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ள முதல் தொடர் என்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இத்தொடரில், இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது. காயம் காரணமாக மயாங்க் அகர்வால் இப்போட்டியில் விளையாடவில்லை. ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து ராகுல் ஓப்பனிங் ஆடுகிறார்.
இதுவரை ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றுள்ள 63 டெஸ்ட் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 23 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 17 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்த மைதானத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதிகபட்சமாக 658/8 என்ற ஸ்கோரை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
IND vs ENG 1st Test Live updates: இங்கிலாந்து அணி திணறல் - 159 ரன்களுக்கு 8 விக்கெட் இழப்பு
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பு 159 ரன் குவித்துள்ளது. அந்த அணியில், அதிகபட்சமாக ஜோ ரூட் 64 ரன்னில் ஆட்டமிழந்தார்.
J Bairstow (29) is out : இந்திலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன் குவிப்பு
சிறப்பாக விளையாடி வந்த Jonny Bairstow முகமது ஷமி பந்து வீச்சில் வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த Bairstow 71 பந்தில் 29 ரன் குவித்திருந்தார்.
இந்திலாந்து அணி தற்போது நான்கு விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்துள்ளது





















