(Source: ECI/ABP News/ABP Majha)
ICC T-20 WC, Super 12: 23 நாட்கள்... 1 கோப்பை... டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 இன்று தொடக்கம்: முழு விபரம் இதோ!
சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வாகியுள்ள ஒவ்வொரு அணியும், அந்த அணி இடம் பெற்றிருக்கும் பிரிவில் உள்ள மற்ற 5 அணிகளோடு விளையாடும். இதனால், ஒவ்வொரு அணிக்கு 5 போட்டிகள் என மொத்தம் 30 போட்டிகள் நடைபெற உள்ளது.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்து, இன்று முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. ஏற்கனவே 12 அணிகள் தேர்வாகி இருந்த நிலையில், தகுதிச்சுற்று முடிவில் ஸ்காட்லாந்து, வங்கதேசம், இலங்கை, நமிபியா அணிகள் அடுத்த சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா vs தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் இன்று நடைபெற உள்ளன.
டி-20 உலகக்கோப்பைக்கு தேர்வான அணிகள் விவரம்:
சூப்பர் 12 க்ரூப் :1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், க்ரூப் ஏ வின்னரான இலங்கை, க்ரூப் பி ரன்னரனான வங்கதேசம்.
சூப்பர் 12 க்ரூப்:2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், க்ரூப் ஏ ரன்னரான நமிபியா, க்ரூப் பி வின்னரான ஸ்காட்லாந்து.
க்ரூப்:1-ல் இடம்பிடித்திருக்கும் அணிகளுக்கான போட்டிகள் இன்று தொடங்குகின்றது. மதியம் நடைபெற இருக்கும் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா vs தென்னாப்ரிக்கா அணிகளும், மாலை நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
க்ரூப்:2-ல் இடம்பிடித்திருக்கும் அணிகளுக்கான போட்டிகள் நாளை தொடங்குகின்றது. முதல் போட்டியில் இந்தியா vsபாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன
From the teams in the groups to all the key fixtures, here's your ultimate guide for the Super 12 stage of the #T20WorldCup 2021 👇https://t.co/ly8SMWWY4Q
— T20 World Cup (@T20WorldCup) October 22, 2021
Also Read: ICC T-20 WC: நமிபியாவை வழிநடத்திய சிஎஸ்கே வீரர்: பழைய சிஎஸ்கே அணி பிடியில் உலககோப்பை!
போட்டிகள் நடைபெற இருக்கும் மைதானங்கள்:
சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம் ஆகிய மூன்று மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அபுதாபியில் நடக்க இருக்கும் முதல் அரை இறுதிப்போட்டி நவம்பர் 10-ம் தேதியும், இரண்டாவது அரை இறுதிப்போட்டி துபாயில், நவம்பர் 11-ம் தேதியும் நடைபெற உள்ளது. டி-20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
டி-20 உலகக்கோப்பை ஃபார்மெட்:
சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வாகியுள்ள ஒவ்வொரு அணியும், அந்த அணி இடம் பெற்றிருக்கும் பிரிவில் உள்ள மற்ற 5 அணிகளோடு விளையாடும். இதனால், ஒவ்வொரு அணிக்கு 5 போட்டிகள் என மொத்தம் 30 போட்டிகள் நடைபெற உள்ளது.
வெற்றி, தோல்விக்கு எத்தனை புள்ளிகள்:
சூப்பர் 12 சுற்றில் விளையாடும் போட்டிகளில், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகளும், சமமாகும் போட்டியில் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளியும், போட்டி நடத்தப்படாமல் கைவிடப்பட்டால் புள்ளி ஏதும் வழங்கப்படாமலும் விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி போட்டிகள் விவரம்:
இந்தியா vsபாகிஸ்தான் ; அக்டோபர் 24, மாலை 6 மணி, துபாய்
இந்தியா vsநியூசிலாந்து ; அக்டோபர் 31, மாலை 6 மணி, துபாய்
இந்தியா vsஆப்கானிஸ்தான் ; நவம்பர் 3, மாலை 6 மணி, அபு தாபி
இந்தியா vsஸ்காட்லாந்து ; நவம்பர் 5, மாலை 6 மணி, துபாய்
இந்தியா vsநமிபியா ; நவம்பர் 8, மாலை 6 மணி, துபாய்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்