ICC T-20 WC: தோல்வியின்றி சூப்பர் 12-க்கு முன்னேறியது ஸ்காட்லாந்து: யாரை காவு வாங்க போகுதோ இந்த ‛சுவர்’
இந்த டி-20 உலகக்கோப்பையில் கவனிக்கத்தக்க வெற்றிகளை பதிவு செய்துள்ள ஸ்காட்லாந்து அணி, டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே, க்ரூப் 1,2 என ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் என மொத்தம் எட்டு அணிகள் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில், க்ரூப் ஏ,பி-ல் இடம் பிடித்திருந்த எட்டு அணிகளில் இருந்து ஒவ்வொரு க்ரூப்பிலும் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இதுவரை எந்தெந்த அணிகள் தேர்ச்சி பெற்றுள்ளன, யாருக்கு வாய்ப்பு என்பதை பற்றிய முழு விவரம் இதோ!
Also Read: உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் இவர்தான்.. இந்த சாதனை புதுசு..
க்ரூப்:பி
ஸ்காட்லாந்து, வங்கதேசம், ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய நான்கு அணிகள் க்ரூப்:பி-ல் இடம் பிடித்திருந்தன. இதில், ஸ்காட்லாந்து அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றியைத் தழுவி முதல் இடத்தை பிடித்துள்ளது. மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி கண்டு வங்கதேச இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஓமன், மூன்றில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றும், பப்புவா நியூ கினியா அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியும் இருப்பதால், இந்த இரு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி உள்ளது.
சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருக்கும் ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடம் பிடித்திருக்கும் க்ரூப்:1 பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஸ்காட்லாந்து அணி, டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். இந்த டி-20 உலகக்கோப்பையில் கவனிக்கத்தக்க வெற்றிகளை பதிவு செய்துள்ள ஸ்காட்லாந்து, சூப்பர் 12 சுற்றில் மற்ற அணிகளுக்கு டஃப் கொடுக்க காத்திருக்கிறது.
வங்கதேச அணியைப் பொருத்தவரை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ள க்ரூப்:1-ல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என முக்கிய அணிகளை வீழ்த்தி தொடர்களை வென்று தகுதிச்சுற்றில் கால் எடுத்து வைத்த வங்கதேசத்தை அடித்து வென்றது ஸ்காட்லாந்து. ஓமன் அணிக்கும், வங்கதேச அணிக்கும் கடுமையான போட்டி நிலவியதில், போராடி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது வங்கதேசம்.
Scotland and Bangladesh progress from Group B 📈
— T20 World Cup (@T20WorldCup) October 21, 2021
Now, onto Group A 🤩 #T20WorldCup pic.twitter.com/gpnKKUYtnI
க்ரூப்:ஏ
இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா என ஆகிய நான்கு அணிகள் க்ரூப்:பி-ல் இடம் பிடித்திருந்தன. இதுவரை, இலங்கை அணி விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றியைத் தழுவி முதல் இடத்தை பிடித்துள்ளது. அயர்லாந்து, நமிபியா அணிகள் தலா ஒரு வெற்றியுடன் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன. இந்த டி-20 உலகக்கோப்பையில் ஏமாற்றம் அளிக்கும் விதமாக விளையாடிய நெதர்லாது, இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி கிட்டத்தட்ட தகுதிச்சுற்றில் இருந்து வெளியேற உள்ளது.
இந்த நான்கு அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்கையில், இலங்கை சூப்பர் 12 சுற்றில் விளையாடுவது உறுதியாகிவிட்டது. இலங்கை vs நெதர்லாந்து போட்டி இன்று நடைபெற உள்ளது. அயர்லாந்து vs நமிபியா போட்டியிடும் மற்றொரு போட்டியில், இரு அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்க உள்ளன.
Also Read: கெயில் டூ ரோஹித் சர்மா : T20 உலகக்கோப்பையின் சிக்சர் மன்னர்கள்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்