ICC T20 WC 2021: பாக்.,-நியூசி., மே.இ.,-தெ.ஆ., ஒரே நாளில் இரு யுத்தம்... இருக்கு... இன்னைக்கு சம்பவம் இருக்கு!
க்ரூப்-2-ல் இடம் பிடித்திருக்கும் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்பதால், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இன்றையை போட்டியில் வெற்றி பெற போராடும்.
டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. நான்காவது நாளான இன்று, இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. மதியம் 3.30 மணிக்கு தொடங்க இருக்கும் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்ரிக்கா அணிகளும், மாலை 7.30 மணிக்கு தொடங்க இருக்கும் போட்டியில் பாகிஸ்தான் vs நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.
வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்ரிக்கா
The defending champs won’t be taking a backward step against a familiar foe when they resume action in the #T20WorldCup https://t.co/KQLJ9DCfCy
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2021
நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, டி-20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்கள் சொதப்பலாகவே இருந்தது. அதனை தொடர்ந்து நடந்த முதல் போட்டியில், இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. தென்னாப்ரிக்காவை பொருத்தவரை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. இதனால், இரு அணிகளுக்கும் இன்றைய போட்டியில் வெற்றி தேவை என்ற கட்டாயத்தில் களம் இறங்க உள்ளது.
பாகிஸ்தான் vs நியூசிலாந்து
#Pakistan are on a high after their 10-wicket victory over #India, while #NewZealand look to hit the ground running in their #T20WorldCup opener.
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2021
A delicately-poised Group 2 match-up!#PAKvNZ preview 👉 https://t.co/blDFy8549phttps://t.co/fvh1UKIj76
இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசுர நம்பிக்கையோடு வலிமையாக அடுத்த போட்டியை சந்திக்க தயாராக உள்ளது. நியூசிலாந்துக்கு இது முதல் போட்டி. இந்த போட்டியை அடுத்து இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. க்ரூப்-2-ல் இடம் பிடித்திருக்கும் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்பதால், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இன்றையை போட்டியில் வெற்றி பெற போராடும்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்