(Source: ECI/ABP News/ABP Majha)
Breaking Chess : மாவட்ட வாரியாக இனி செஸ் போட்டிகள்.. மாஸ் உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு..!
தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 10 முதல் மாவட்ட வாரியாக செஸ் போட்டிகள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 10 முதல் 26 ம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த செஸ் போட்டிகளை தமிழ்நாடு அரசும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இணைந்து நடத்துகின்றன.
#JUSTIN | ஜூன் 10 முதல் மாவட்ட வாரியாக செஸ் போட்டிகள்!https://t.co/wupaoCQKa2 | #Chess #Tamilnadu pic.twitter.com/HH0JLyfLjk
— ABP Nadu (@abpnadu) June 7, 2022
ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றிபெறும் 2 மாணவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை நேரில் பார்க்க அனுமதிக்கப்படும் என்றும், போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் http:prs.aicf.in/players- இல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விளையாட்டின் புகழ் மற்றும் உலகளாவிய பிரதிநிதித்துவத்தைக் கொண்டாடும் வகையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியவை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முன்னதாக செஸ் ஒலிம்பியாட் டார்ச் ரிலேவை அறிமுகப்படுத்தி நிறுவனமயமாக்க ஒப்புக்கொண்டன.
இதுகுறித்து FIDE தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச் தெரிவிக்கையில், “இந்த முயற்சி செஸ் விளையாட்டை பிரபலப்படுத்தவும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் ஆதரவை அதிகரிக்கவும் உதவும். ஒலிம்பியாட் போட்டியின் அடுத்த பதிப்பில் தொடங்கி, ஒலிம்பிக் போட்டிகளின் மரபுகளுக்கு ஏற்ப, ஜோதி FIDE உறுப்பு நாடுகளுக்குச் செல்லும் அனைத்து கண்டங்களிலும் பயணிக்கும், இறுதியில் செஸ் ஒலிம்பியாட் தொடங்குவதற்கு முன்னதாக போட்டி நடத்தும் நாடு மற்றும் நகரத்தில் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.
“இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்கியதற்காக FIDE க்கு நன்றி. இது இந்திய சதுரங்கத்தின் எதிர்காலமாக இருக்கும் நாட்டின் இளம் தலைமுறையினருக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும்” என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் கூறினார்.
ஏறக்குறைய 100 ஆண்டுகால விளையாட்டு வரலாற்றில் முதன்முறையாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியா நடத்த இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட்டின் வரவிருக்கும் பதிப்பு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னைக்கு அருகிலுள்ள மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்