Qatar vs Ecuador FIFA WC: முதல் போட்டியில் மோதும் கத்தார் ஈக்வோடர்; யார் பலமான அணி? வெற்றி வாய்ப்பு யாருக்கு?
Qatar vs Ecuador FIFA WC: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் வெற்றியைப் பெறப்போகும் அணி எது என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

Qatar vs Ecuador FIFA WC: கத்தார் நாட்டில் மிகவும் கோலாகலமான உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடங்கவுள்ளது.
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்களோ, அதை விட இரண்டு மடங்கு ரசிகர்கள் கால்பந்து விளையாட்டிற்கு உண்டு. கால்பந்து தொடரில் பல நாடுகளில் லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், ஃபிபா உலகக் கோப்பை என்றதும் ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களும் உற்று நோக்கும் ஒரே தொடர் இந்த தொடர் மட்டும்தான்.
அந்தவகையில் ஃபிபா சர்வதேச கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் இந்த தொடரானது வருகின்ற 20ம் தேதி கத்தார் நாட்டில் தொடங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடங்கவுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் ஆவலும் அதிகரித்து வருகிறது. கத்தாரில் தொடங்கவுள்ள இந்த போட்டி தொடக்க நாள் கொண்டாட்டத்துடன் தொடங்கவுள்ளதால் மாலை 6 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.
32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாட இருக்கின்றனர். முதல் போட்டியானது வருகின்ற 20ம் தேதி கத்தார்-ஈகுவடார் நாடுகளுக்கிடையே நடைபெற இருக்கிறது. 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 32 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. மொத்தம் 64 போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல் இந்த முறையும் 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தார் நாடே கால்பந்து திருவிழாவில் மூழ்கவுள்ளது.
💪 ¡Vamos! #ElBancoDeLaTRI #HaremosHistoria https://t.co/ZapPU7FjX4
— FEF 🇪🇨 (@FEFecuador) November 18, 2022
இன்று நடக்கவுள்ள முதலாவது போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ள கத்தார் மற்றும் ஈக்வோடர் அணிகள் இதுவரை மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. முதன்முதலாக இரு அணிகளும் 1996ல் பிப்ரவரி மாதத்தில் மோதிக் கொண்டன. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க போட்டி டிராவில் முடிந்தது. அடுத்ததாக அதே ஆண்டில் நடந்த மற்றொரு போட்டியில் கத்தார் அணி ஒரு கோலும், ஈக்வோடர் அணி 2 கோல்களும் போட்டன. இதனால் ஈக்வோடர் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2018ல் தான் இரு அணிகளும் மோதிக்கொண்டன. அதில் கத்தார் அணி 4 கோல்களும் ஈக்வோடர் அணி 3 கோல்களும் அடித்தன. இந்த போட்டியில் கத்தார் அணி வெற்றி பெற்றது.
கத்தார் v ஈக்வோடர்
இன்று களமிறங்கும் இரு அணிகளுக்கும் உலகக் கோப்பையைப் வெல்வது பெரும் கனவாக இருந்தாலும், இந்த உலகக் கோப்பையில் இரு அணிகளும் தங்களை சூப்பர் 16 சுற்றுக்கு தங்களை நிலை நிறுத்த முயற்சிக்கும். குரூப் ஏ வில் உள்ள மற்ற இரு அணிகளான நெதர்லாந்து மற்றும் செனகலுடன் ஒப்பிடுகையில் இந்த இரு அணிகளும் சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேற வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகவே உள்ளது. மேலும், இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாகவும் உள்ளது. இந்த போட்டி டிராவில் முடியாமல் ஏதேனும் ஒரு அணி வெற்றி பெரும் பட்சத்தில் 2022ஆம் ஆண்டின் உலகக் கோப்பை திருவிழாவின் முதல் வெற்றியைப் பெற்ற அணி எனும் பெருமையைப் பெரும் அணியாக இருக்கும். இரு அணிகளும் சமமான பலத்துடன் இருப்பதால் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் சாதகமாகவே இருந்தாலும், ரசிகர்கள் வாக்கெடுப்பில் ஈக்வோடர் அணி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகமே உற்று நோக்கும் முதல் போட்டி என்பதால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை இரு அணிகள
தேதி | போட்டி | ரிசல்ட் | புள்ளிக: | போட்டித்தொடர் |
---|---|---|---|---|
18 Feb 1996 | கத்தார் v ஈக்வோடர் | D | 1-1 | International Friendly |
25 Feb 1996 | கத்தார் v ஈக்வோடர் | W | 1-2 | International Friendly |
12 Oct 2018 | கத்தார் v ஈக்வோடர் | L | 4-3 | International Friendly |
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

